Sunday, February 24, 2013

நரகத்திற்குப் போகிறவன் பார்ப்பானே!

"பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி" என்று பெரியார் ஏன் சொன்னார்?

உண்மையான கடவுளிருந்தால் நரகத்திற்குப் போகிறவன் பார்ப்பானே!

கடவுள் இருக்கட்டும்- நாங்கள் வேண்டாமென்று கூறவில்லை!

எங்கும் வியாபித்திருக்கும் அந்தக் கடவுளுக்கேன் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள்?

அவருக்கேன் 10-ஏக்கர், 20-ஏக்கர், விஸ்தீரணத்திற்கு மாடமாளிகையும் கூட கோபுரங்களும்?

அவருக்கேன் ஒரு கோடி, இரண்டு கோடி மதிப்பு பெறும்படியான நகைகள்?

அவருக்கேன் பல லட்சரூபாய் பெறுமான தங்கக் குல்லாய்கள் - வைரக் குல்லாய்கள்?

அவருக்கேன் நித்தியம் ஆறுவேளை பூஜை?

பாடுபட்டும் பல பாட்டாளி மக்கள் பசியுடன் இருக்க, அவருக்கேன் 10-படி, 20-படி சோற்றுருண்டைகள்?

அவருக்கேன் பாலாபிஷேகம் - தேனாபிஷேகம்?

அவருக்கேன் வருடந்தோறும் கல்யாணம்?

அவருக்கேன் தேவடியாள்கள்?

அவருக்கேன் தேரும் - திருவிழாவும்?

சர்வ சக்தி படைத்த அவருக்கேன் ஏராளமான பொருள் செலவு செய்து நாம் இதையெல்லாம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டும்?

இவை அவருக்குத் தேவையில்லை என்றால் நாஸ்திகமா?

அவர் பேரைச் சொல்லி நம்மை ஏமாற்றும் பார்ப்பான் தன்மையை ஏன் இன்னும் நீ ஒழிக்காமல் இருக்கிறாய்?

நீ கொடுப்பதால் இத்தனையும் நடக்கிறதா?

அல்லது நீ கொடாமல் இருந்தால்கூட இத்தனையும் நடக்குமா?

நீ கொடாமல் இருந்தால், ஒரு நாள் வைத்திருப்பானா இந்தக் கல்லுப் பொம்மைக் கடவுளை - இந்தப் பேராசை பார்ப்பான்?

உனக்கு முன்னாலன்றோ கடப்பாரை எடுத்துக் கொண்டு போவான் - கோயிலை இடித்து உள்ளதையும் அபகரித்துக் கொள்ள?

இதை அறியாமல் பைத்தியக்காரத்தனமாக ஏனப்பா அள்ளிக் கொடுத்து வருகிறாய்?

கடவுள் பேரால் ஏனப்பா அள்ளிக் கொடுத்து வருகிறாய்?

கடவுள் பேரால் ஏனப்பா ஒரு கூட்டத்தை சோம்பேறிகளாக்கி வருகிறாய் - என்று கேட்பதா பாவம்?

கடவுள் சொத்தால் யாருக்கு லாபம்?

கடவுளின் சொத்துக்களைக் கொண்டு எத்தனைத் தொழிற்சாலைகள் ஆராய்ச்சிப் பண்ணைகள் நடத்தலாம்!

இத்தனைச் சொத்துக்களையும் கடவுளுக்கு அழுதவன் நீயும், உன் பாட்டனும், பூட்டனும் தானே?

ஒரு பார்ப்பானாவது ஒரு அடி நிலம் விட்டிருப்பானா சாமிக்கென்று?

அப்படிச் செய்ய அவனென்ன உன்னைப் போல் பைத்தியக்காரனா?

பார்ப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் கூட, வீதியிலுள்ள சாமான் வீட்டுக்குள் போகுமே ஒழிய ஒரு ஓட்டை உடைகல் சட்டிப்பானைக்கூட வீதிக்கு வராதே – தெரியுமா உனக்கு அது?

எந்தப் பார்ப்பானாவது தன் வீட்டு எண்ணெயைக் கொண்டு கடவுளுக்கு தீபம் வைக்கிறானா?

எந்தப் பார்ப்பானாவது திருவண்ணாமலை தீபத்திற்கு நெய் டின்கள், எண்ணெய் டின்கள் அனுப்பியிருக்கிறானா?

எந்தப் பார்ப்பானாவது சூத்திரனுக்குச் சமாராதனை செய்திருக்கிறானா? ஏன் ஒரு குண்டு விறகாவது உங்கள் சமாராதனைக்காக அவன் அனுப்பியிருப்பானா? ஏன் அப்பா நீ மட்டும் இப்படி அழ வேண்டும்? அவன் மட்டும் ஏன் டிக்கெட் கொடுத்து வர வேண்டும் என்றால் இதையா நாஸ்திகம் என்பது?

ஒரே அடியாக மோக்ஷத்தில் இடம் பிடித்துக் கொள்ள வேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்டால் அதற்கு எங்களைத்தானா தூற்ற வேண்டும்?

ஒழுக்கமுள்ளவனுக்குத்தான் மோஷத்தில் இடம் இருக்குமென்றால் நீங்கள் நினைக்கிறீர்களா?

ஒரு பார்ப்பானுக்காவது மோக்ஷத்தில் இடம் கிடைக்குமென்று?

கடவுளுக்குத்தான் நேர்மை, நீதி இருக்குமானால் அவர் பேரால் நம்மை வஞ்சித்துப் பிழைக்கும் பார்ப்பான் ஒருவரையாவது மோக்ஷத்திற்கு அனுப்பி வைப்பாரா அவர்?

அப்படிப்பட்ட பார்ப்பானா உனக்கு மோக்ஷத்திற்கு டிக்கட் கொடுப்பது? அதற்காகவா நீ அவன் காலைக் கழுவி தண்ணீர் குடிப்பது?அறிவிருக்கும் போது நீங்கள் சிந்திக்க வேண்டாமா இவற்றையெல்லாம்?

நம்பத்தகாத காட்டுமிராண்டிக் காலத்திய சங்கதிகளைக் கொண்டு வந்து புகுத்தி மதம், கடவுள் என்ற பேரால் நம்மை ஏமாற்றி வாழும் பார்ப்பானை நம்பியா இந்த 1947-லும் நீ சூத்திரனாயிருப்பது?

இந்த இருபதாவது நூற்றாண்டிலா நீ உன் கடவுளைத் தாசி வீட்டிற்கு அழைத்துச் செல்வது? உன் மனிதத்தன்மை ஒப்புக் கொள்கிறதா இதை?

ஆண் மகன் தான் தானும் கடவுளைப்போல் இரண்டு பெண்டாட்டி வைத்துக் கொள்ளலாம்.கடவுளைப்போல் தாசி வீட்டிற்குச் சென்று வரலாம் என்று நினைத்துக் கடவுளைக் கும்பிடுவானானால், என்னருமைத் தாய்மார்களே நீங்களுமா அந்தக் கடவுளுக்குத் தேங்காய், பழம் கொண்டு சென்று படைப்பது?

"உன்னைப் போல் என் புருஷனும் தினம் தேவடியாள் வீட்டுக்குச் செல்லட்டும்" என்று துதிக்கவா நீங்கள் கோயிலுக்குச் செல்லுவது?

அல்லது "என் புருஷனைப் போல் எனக்கும் இன்னும் இரண்டொரு மாப்பிள்ளைமாரைத் தேடிக் கொடு" என்று கேட்கவா செல்லுகிறீர்கள்? இல்லையே!பின்னையேன் போக வேண்டும்?

உங்களுக்கு அறிவிருந்தால் மனிதத் தன்மையில் விருப்பமிருந்தால், ஒழுக்கத்தில் நாட்டமிருந்தால், தாய்மார்களே!

நீங்கள் ஆளுக்கொரு கம்பு எடுத்துச் செல்ல வேண்டும் - கோயிலுக்குப் போகும்போது! "சாமி உனக்கேன் இரண்டு பொண்டாட்டி?" என்று கேட்டு அடிக்க வேண்டும் - அந்தக் கம்பால்!

இரண்டு பொண்டாட்டி இருந்தும் சாமி உனக்கேன் தேவடியாள்?

உன்னைப் பார்த்துத்தானே என் புருஷனும் தேவடியாள் வீட்டுக்குச் சென்று விடுகிறான்! என்று கூறி உடைத்து தூளாகும்படி அடிக்க வேண்டும் - அந்தக் கம்பால். "என் சகோதரியை ஏன் சாமி பொட்டிக் கட்டிக் கொள்ள வேண்டுமென்கிறாய்?" என்று கேட்டு அடிக்க வேண்டும் - அந்தச் சாமியை!

அய்யரோ, தர்மகர்த்தாவோ அதைத் தடுக்க வந்தால், "நியாயம் கூறையா? அந்தச் சாமிக்கேன் வருடத்திற்கொரு கல்யாணம்; போன வருஷம் செய்த கல்யாணம் என்ன ஆயிற்று? அதுவும் போதாமல் தேவடியாள் வேறு ஏன்?" என்று அவர்களையும் அடித்துக் கேளுங்கள்.

உங்களைக் கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றால், அங்கும் கேளுங்கள். கம்பைக் காட்டி, "நாங்கள் ஏனையா சட்டப்படி, சாஸ்திரப்படி, கடவுள் வாக்குப்படி சூத்திரச்சிகள், தாசிகள்? இதை ஆதரிக்கும் இவர்களையும், இதை அனுமதிக்கும் கடவுளையும், இந்த இரும்புத்தடி கம்பால் அடித்தாலென்ன பாபம் வந்துவிடும்?

" என்று ஓங்கிக் கேளுங்கள்!

இப்படிச் செய்தாலன்றோ உங்கள் இழிவு நீங்கும்! இதை விட்டு உங்களைப் பழிக்கும் கடவுளர்களுக்கு நீங்கள் ஒய்யார நடை நடந்து தேங்காய், பழம் எடுத்துச் செல்கிறீர்கள் என்றால், உங்கள் இழிவு நீங்குவது தான் எப்போது? தாசிப்பட்டம் போவது தான் எப்போது?

"சூத்திரனுக்கும், சூத்திரச்சிக்கும் கடவுளுண்டா என்பது தெரியுமா உங்களுக்கு?

மனுநீதிப்படி சூத்திரர்களுக்குக் கடவுள்கள் இந்தப் பார்ப்பனர்கள் தான், இவர்கள் தான் சூத்திரர்களுக்குப் பூதேவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? கடவுளை நோக்கி தவம் செய்தான் என்பதற்காக சூத்திரனான சம்பூகன், ராமன் என்ற கடவுளால் கொல்லப்பட்டான் - மனுதர்மப்படி என்பது சாஸ்திரம். இதை நீங்கள் படித்திருக்கிறீர்களா?

நீங்களெல்லோரும் பார்ப்பானுக்கு அடிமைகள்! உங்கள் சொத்துக்களையோ, உங்கள் மனைவி மக்களையோ அனுபவிக்க அவனுக்குச் சகல உரிமையுண்டு என்று கூறும் சாஸ்திரங்கள் இன்றும் இருந்து வருகின்றன என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

நாங்கள் இவற்றை எல்லாம் எடுத்துக் காட்டிக் கண்டித்து வருவதால் ஏதோ தந்திரமாக சில சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றனவே அல்லாது, நாங்களே இல்லாவிட்டால் சூத்திரத் தாய்மார் ஒவ்வொருத்தரும் பொட்டுக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்குமே இந்நாட்டில்!

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் நான் கூறினால்; சமீப காலம் வரைக்கும் நம் திராவிட நாட்டின் ஒரு பாகத்தில் பக்குவமடைந்த பெண் ஒவ்வொருத்தியும் முதலில் ஒரு ஜாதி பிராமணனால் தான் ருசி பார்க்கப்பட வேண்டும் என்ற முறை இருந்து வந்ததை நீங்கள் அறிவீர்களா?

இதை நான் கூறவில்லை. தோழர் அம்பேத்கர் அவர்கள், "காந்தியாரும், காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் சாதித்ததென்ன?" என்ற தமது புத்தகத்தில் 205–ம் பக்கத்தில் மேல்நாட்டு ஆசிரியர்களின் மேற்கோள்ளுடனும் மலபார் கெஜட்டின் ஆதாரத்துடனும் இப்படிப்பட்ட ஒரு பழக்கம் - சம்பந்தமுறை திருமணம் செய்து கொண்ட மக்களிடையே இருந்து வந்ததாக விளக்கிக் கூறுகிறார்!

வாங்கிப் பாருங்கள் அதில் ஊர் பேர் இருக்கிறது.

இப்படிப்பட்ட அக்கிரம "அந்தணர்"களுக்கா நீங்கள் அடிபணிவது?

ஆகவே உங்கள் இழிவு நீங்க வேண்டுமாயின் ஒன்று இப்படிப்பட்ட இந்து மதம் ஒழிய வேண்டும்! அல்லது அதை விட்டு நீங்கள் வெளியேற வேண்டும்!

நீங்கள் வெளியேறும் பட்சத்தில், கும்பிடவோ, கொடுக்கவோ, மொட்டையடித்துக் கொண்டு காணிக்கை செலுத்தவோ, காவடி தூக்கிக் கொண்டு குரங்காட்டம் குதிக்கவோ அக்கிரகாரத்தில் ஆள் கிடையாது.

உண்மையாகவே கேட்கிறேன், ஒரு பார்ப்பானாவது, பார்ப்பன அம்மையாவது திருப்பதியில் மொட்டை அடித்துக் கொள்ளும்போதோ அல்லது திருத்தணிக்குக் காவடி தூக்கும் போதோ அல்லது கோவிந்தா, கோவிந்தாவென்று கூறிக் கொண்டு தெருவில் உருளும் போதோ நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

நீங்கள் கொடுப்பது ஒழிந்தால் கோயில்கள் தாமாக ஒழியும். அவை ஒழிந்தால் ஆரியத்தின் மோச வேலைகளும் அன்றே ஒழிந்துவிடும்.

ஒருவேளை "ஆற்று மண்ணையாவது எண்ணிவிடலாம், நமது சாமிகளை எண்ண முடியாது போல் இருக்கிறதே!

எத்தனைச் சாமிகள்!

நூல் கேட்கும் சாமிகள், துணி கேட்கும் சாமிகள், மயிர் கேட்கும் சாமிகள், வெடி கேட்கும் சாமிகள், தேங்காய் கேட்கும் சாமிகள், காசு கேட்கும் சாமிகள், கற்பூரங் கேட்கும் சாமிகள்!

இன்னும் என்னன்னமோ கேட்கும் சாமிகள். எத்தனை எத்தனை கோடியோ இன்னும் நம் நாட்டில் இருக்கின்றனவே! அத்தனைக்கும் படைத்துத்தானே நாம் வர வர குட்டிச் சுவராகி வருகின்றோம். இதைக் கூறுவதா நாஸ்திகம்?

நாஸ்திகம் என்றால் அர்த்தம் தெரியுமா உனக்கு?

ஒருவன் கடவுள் இல்லை என்று கூறுவானானால், அவனே கடவுள் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

அவனுக்கு உலகில் நடக்கும் சகல காரியங்களுக்கும் காரணங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதை நீ அறிந்திருக்கிறாயா?

கடவுள் இல்லை என்று ஒருவன் கூறுவானானால் கடவுள் தன்மை என்பதை தெரிந்த அவ்வளவு அறிவு பெற்று இருக்கிறான் என்று தான் அர்த்தம்.


கடவுள் இல்லையென்றால், யாருக்குக் கடவுள் இல்லை? உண்மை ஞானிக்குத்தான் கடவுள் இல்லை! வேதாந்தி, உண்மையின் முடிவு கண்டவனுக்குத்தான் அப்படிப்பட்ட ஒரு ஞானியை யாரும் வெறுக்கமாட்டார்கள்.

அவனும் யாரையும் வெறுக்க மாட்டான். அவனை யாரேனும் வெறுப்பார்களானால் அவர்களை அறிவிலிகள், முட்டாள்கள் என்று தான் உலகம் கூறும்.

அப்படியிருக்க என்னைப் போன்ற சாதாரண ஆட்கள் கடவுள் இல்லை என்று கூறும்படியான அவ்வளவு பெரிய அறிஞர்கள் அல்ல,.

நாங்களென்ன கடவுள் இல்லை என்று கூறி தப்பட்டையா அடித்துக் கொண்டு வருகிறோம்?

கடவுள் பேரைச் சொல்லி யாரும் யாரையும் ஏமாற்ற வேண்டாம் என்று தானே கூறி வருகிறோம்?

அப்படி ஏதாவது கடவுளைப்பற்றிப் பேச நேர்ந்தால், எது கடவுள்?

அது எப்படி இருக்கும்? எதைக் கொண்டு அதைக் கடவுளென்று தீர்மானிப்பது என்று தானே நாங்கள் கேட்கிறோம்?

சரியான சமாதானம் கூறத் தெரியவில்லையானால், தெரியவில்லை என்று சொல்லி விட்டுப்போயேன். எங்களை ஏன் நாஸ்திகர்கள் என்று கூறி மக்களிடம் எங்கள் மீது துவேஷத்தை உண்டாக்குகிறாய்?

ஒன்றரை முழம் குழவிக்கல் பொம்மையைக் கடவுளென்று கூறி அதற்கு பாலாபிஷேகம் செய்து, பட்டாடையும் உடுத்தி பல நகைகளும் போடுகிறாய்!

அம்மனை அய்யர் தொடுகிறாரே என்ற கவலை இல்லையே உனக்கு!

மறுநாள் காலையில் போய்ப் பார்த்தால் அம்மணமாயிருக்கிறதே அந்த அம்மன், வந்தத் திருடன் நகையைக் கழட்டிக் கொண்டு போனதல்லாமல் சேலையையும் அவிழ்த்துப் போய்விட்டானே! உன் சாமியால் அதைத் தடுக்க முடியவில்லையே!

உண்மையில் சாமி அந்தக் கல்லில் இருக்குமானால் கிட்டப் போவானா அந்தத் திருடன்? போனாலும் தொடுவானா அந்தச் சாமியை? நினைத்தவுடன் நெஞ்சு புகைந்து போகாதா அவனுக்கு?ஏன் இப்படி என்று சிந்தித்துப் பார்த்தாயா நீ?

மற்ற உலக மக்களுக்கெல்லாம், முஸ்லீம், கிறிஸ்துவர்களுக்கெல்லாம் கடவுள் இல்லாமலா போயிற்று? அவர்களெல்லாம் இப்படி ஒரு முழ பொம்மையை வைத்துக் கொண்டு கும்பாபிஷேகம், பூஜை, கல்யாணம், கருமாதி, உற்சவம் முதலியன செய்து கொண்டா கூத்தடித்தார்கள்?

உன் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தாயா?

திராவிடனுக்கு எங்காவது குழவிக்கல், பொம்மை சாமி இருந்தது என்று எழுதப்பட்டிருக்கிறதா அதில்? அப்படித்தான் உனக்கு ஒரு சாமி வேண்டுமென்றால் அது உன்னைப் போலல்லவா இருக்க வேண்டும்?

உன்னைத் தொட்டாலும், உன் நிழல்பட்டாலும் தான் செத்துப் போவதாகக் கூறுவதா உனக்குச் சாமி?

வெட்கமில்லையா உனக்கு?

கோயில் கட்டுவதும் நீ, கும்பாபிஷேகம் செய்வதற்குப் பொருள் கொடுப்பதும் நீ, சாமியின் பூஜைக்கும், சாப்பாட்டிற்கும் படியளப்பதும் நீ, அந்தச் சாமிக்கு தன்னைப் போல் உச்சிக்குடுமி வைத்து விட்டு தன்னைப் போல் பூணூலும் போட்டுவிட்டு நீ கொடுத்த துணியை தன்னைப் போல் 'பஞ்சகச்சம்' வைத்து அதற்கு உடுத்திவிட்டு அதன் மீது மாட்டு மூத்திரத்தைத் தெளித்துவிட்டு, "சாமிக்கு உயிர் வந்துடுத்து, இனி எட்டி நில் - தொடாதே!

" என்று உன்னிடம் கூறிவிடுகிறானே பார்ப்பான்!

நீ அவனையும் தொடக்கூடாது, சாமியையும் தொடக்கூடாது. நீ அவன் சாப்பிடும் போதும் பார்க்கக்கூடாது!

ஆனால் இரண்டு பேருக்கும் நீ தானே படியளக்க வேண்டும்? இது யோக்கியமா? ஏமாற்றுதல் அல்லவா என்று கேட்டால் இதற்கா நாஸ்திகம் என்று பெயர் கொடுப்பது?

மாமாங்கம் என்று கூறிக் கொண்டு போய் மக்களின் மூத்திரம் கலந்தச் சேற்று நீரைத் தெளித்துக் கொண்டு வருகிறாயே!

புத்தியிருக்கா உனக்கு?

இங்கு உன் பெண்டாட்டியை மீட்டிங்குக்கு கூட்டிவர நடுங்குகிறாய், எட்டிப் பார்த்துவிட்டால் கூட அடிக்கப் போகிறாய். அங்கு மாமாங்கக் கும்பலில் அவள் கூட்டத்தில் அகப்பட்டு கூட்டத்தால் கசக்கப்படும் போது வெட்கமில்லாமல் கொந்து பத்திரம், செவ்வு பத்திரம், கழுத்து பத்திரம், காது பத்திரம் என்றுதானே கூறுகிறாய். கொஞ்சமாவது மானமிருந்தால் அப்படிப்பட்ட இடத்திற்குப் பெண்களை இழுத்துக் கொண்டு போவாயா நீ?

மாமாங்கக் குளத்தில் எப்படித் தண்ணீர் பொங்கும் என்று சிந்தித்ததுண்டா நீ? இன்றாவது தெரிந்து கொள். ஜனநெருக்கத்தால் மூத்திரம் வெளியில் விட முடியாத ஜனங்கள் சரசரவென்று குளிப்பது போல் குளத்தில் இறங்கி மூத்திரப்பையை காலி செய்து விடுகிறார்கள். அதுதான் நுரைவரக் காரணம் என்றும், அவர்கள் விடும் மூத்திரத்தாலும், பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் நீரில் இறங்குவதாலும் தான் அந்த நீர்மட்டம் ஏறுகிறதென்றும் அறிவாளிகள் சொல்லுகிறார்கள்.

ஆகவே உங்களை இவையெல்லாம் சரியா? தப்பா? என்று பகுத்தறிவு கொண்டுதான் நடக்கும்படி சொல்லுகிறோம்.

நாணயமாகத் தான் நடக்கும்படி சொல்லுகிறோம்.

இதற்கா நாங்கள் நாஸ்திகர்கள் ஆக்கப்படுவது? இதற்கா நரகத்திற்குப் போக வேண்டும்?

உண்மையான கடவுள் இருந்தால் அவர் பேரைச் சொல்லி மக்களை வஞ்சித்து வரும் இந்தப் பார்ப்பனர்களையன்றோ நரகத்திற்கு அனுப்பிவிட்டு நமக்கு மகிழ்ச்சி செய்தி அனுப்பி வைப்பார்.

இதைக் கேட்பதா நாஸ்திகம்?

இந்த அக்கிரமங்களைக் கண்டு இரத்தம் துடிக்க வேண்டாமா உங்களுக்கு?

எங்களை நாஸ்திகர்களென்று கூறும் இவர்கள் மட்டுமென்ன மகாபக்தர்கள்?

எவனாவது கடவுள் காப்பாற்றித் தருவார் என்று நினைத்துத் தன்னுடைய பணத்தை மேஜை மீது வைத்து விட்டுப் போய்விடுவானா? அப்படித்தான் கடவுளை காவல் வைத்துவிட்டுப் போனாலும் அந்தப் பணம் அப்படியே இருக்குமா? கடவுள் காவலிருக்கும் போது பணம் வைக்க இரும்புப் பெட்டி ஏன்? அதற்குப் பூட்டேன்? அவரையே ஜெயில் கைதி மாதிரி பூட்டி வைப்பதேன்? அப்படி பூட்டு போட்டுங்கூட அவரைப் பெயர்த்து விட்டு அடியில் இருப்பதை அடித்துக் கொண்டு போவானேன்? கோயில் நகைகள் கொள்ளைப் போவானேன்?

"அன்பர்களே! கோயிலும், கடவுள்களும், மதங்களும் பார்ப்பனர் தம் வாழ்வுக்காக வகுத்துக் கொண்ட வழிகள். அவை இருக்க வேண்டிய அவசியமில்லை! அப்படி இருக்க வேண்டுமென்றாலும் அறிவுக்கேற்ற ஒரு நாணயமான, பாராபட்சமற்ற கடவுளை வணங்குங்கள்.

உங்களை இழிவுபடுத்தாத, முட்டாள்களாக்கி வைக்காத ஒரு மதத்தை தழுவி நடவுங்கள்" என்று தான் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

- (14. 12.1947- அன்று திருவண்ணாமலையில் நடந்த திராவிட நாடு பிரிவினை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது. 23. 12. 1947- 'குடிஅரசு' இதழில் வெளியானதில் ஒரு பகுதி) .

குடி அரசு தொகுப்பு – 1947 .

Tuesday, May 8, 2012

அந்தோ பிராமணர்கள் இப்படியாகிப்போனோமே என்று ???

பிராமணர்கள் கழிவறை, சாக்கடை சுத்தம் செய்பவர்களாக, ரிக்சா இழுப்பவர்களாக, கட்டிட வேலை, கூலி வேலை , எடுபிடி வேலை செய்பவர்களாக விடியோ காணுங்கள்.

.எப்படியிருந்த நாங்கள் இப்படியாகி போய்ட்டோம்.

எந்தப் பார்ப்பானாவது காவடி எடுத்து ஆடியிருப்பதைப் பார்த்திருக்கிறாயா? எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதி வெங்கடேசா, கோவிந்தா என்று தெருவில் புரண்டு பிச்சையெடுப்பதை திருப்பதியில் , பழனியில் மொட்டை அடிக்க பார்த்திருக்கிறாயா? .

உழுதுண்ணும் பிராமணன் பற்றி கேட்டதுண்டா?

Brahmins in India have become a minority


Brahmins


நன்றி: youtube.com.

Monday, May 7, 2012

இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள் இலை 4.

இந்து மதம் சார்ந்து உருவான ஆண் - பெண் உறவுகள் வக்கரித்தே கிடக்கின்றன. அவற்றில் சில அக்காலத்துக்கே உரிய எதார்த்தச் சமுதாயத்தைப் பிரதிபலித்து இருக்கும். அதேநேரம், கால்நடைகளை மேய்த்தபடி புலம்பெயர்ந்து, இந்தியா வந்த பார்ப்பனர்கள்,

தமது மிருக இனவிருத்தியில் பாலியல் உறுப்புகளை நலமடித்த வழியில், மனிதப் படைப்புகளை உருவாக்கினர். அப்போது இங்கு இருந்த சிறுவழிபாடுகள் மீது பார்ப்பனியமும், பின்னால் இந்து மதமும் ஊடுருவி அழித்தபோது, சிறுவழிபாட்டுக் கடவுள்களை உறவுமுறைக்குள் இந்து மதம் கொண்டுவந்தது.

இந்த உறவுகள், பிறப்புகள் எல்லாம் வக்கரித்த ஆணாதிக்க எல்லைக்குள், பாலியலை விகாரப்படுத்தி, உருவாக்கப்பட்ட கடவுள்கள் எல்லாம், ஆணாதிக்க காமவிகாரத்தை வெளிப்படுத்துகின்றது.

இந்தப் பிறப்புகளின் பொய்மைகள் அறிவியல் முன்பு அருகதையற்ற நாற்றத்தைக் கொண்டவை. ஆனால் எதார்த்தம் ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை சார்ந்த விகாரத்தை எல்லாம் மனிதனின் வழிபாடாக்கும் நிலையில், இதைத் தொகுத்து அம்பலப்படுத்துவதும், ஈவிரக்கமற்ற வகையில் நிர்வாணமாக்கவேண்டியதும் அவசியமாகிவிடுகின்றது.

இப்படிப்பட்ட வக்கிரங்கள் தான், இன்று பின்நவீனத்துவம் கோரி முன்வைக்கும் வக்கரித்த ஆண் - பெண் உறவுகளின் அடிப்படையாகும். இன்று இதைக் கோரியும், எழுதியும்;, முன்வைக்கும் அனைத்துக்கும் முன்னோடியாக இந்து மதத்தின் வக்கரித்த உறவுகள் உள்ளன. இன்று பின்நவீனத்துவவாதிகள் வைக்கும் பலவற்றை அன்றே இந்து மதம் முன்வைத்தது என்ற உண்மையை எடுத்துக் காட்டுவதன் மூலம், இன்றைய நவீன ஏகாதிபத்தியப் பாலியல் வக்கிரமும் அம்பலமாகிவிடும்.

பார்ப்பனச் சனாதனத் தர்மமாக மனுசாஸ்திரத்தின்படி வர்ண, சாதி வகையில் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை விடுவிப்பதாகக் கூறிய புத்த மதம் இந்தியத் துணைக்கண்டத்தில் செல்வாக்குப் பெற்றது.

அதனால் பார்ப்பன சனாதன மதம் அழிந்து போகும் நிலையை எட்டி பல ஆண்டுகளாகத் தலையெடுக்க முடியாமல் கிடந்தது.

இந்நிலையில் காலடியில் தோன்றிய ஆதிசங்கரன் காசிவரை பயணம் செய்து அத்வைதத்தைப் பரப்பினார். வர்ண, சாதி வதையில் ஒடுக்கிவைக்கப்பட்ட மக்களை மீண்டும் பார்ப்பன மதத்துக்குள் ஈர்ப்பதற்காகச் சிறுதெய்வங்களை எல்லாம் பெருந்தெய்வங்களின் அவதாரங்கள் என உறவுபடுத்தும் மதக்கோட்பாடுகளை உருவாக்கினார்.

அதாவது குல, கண தெய்வங்கள் எல்லாம் புராண, இதிகாசக் கடவுள்களுடன் உறவுபடுத்தி புனைவுகளை உருவாக்குவதன் மூலம் பார்ப்பன மதத்துக்குப் புத்துயிர் கொடுக்க முனைந்தார்.

இந்துமத உருவாக்கத்தினூடாக, வக்கரித்த உறவுகள் புனையப் பட்டபோது, சிறுவழிபாடுகள் சீரழிக்கப்பட்டன.

இங்கு சிறுவழிபாட்டுக் கடவுள்கள் ஏன், எதற்காக, எந்த உற்பத்தி மீது உருவாயின என்பதை ஆராய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

மாறாக அந்தச் சிறுகடவுள்களைப் புணர்ந்தும், வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்தும் உறவாக்கிக் குடும்பத்தில் இணைத்ததன் மூலம், அவற்றோடு இந்துமதம் சார்ந்த உறவுகள் அங்கீகாரம் பெற்றன.

அவற்றின் நாற்றத்தையும் ஆபாசத்தையுமே அம்பலப்படுத்துவதில் கவனமெடுக்கின்றது இப்பகுதி.

இங்கு சில முன்கூட்டியே சிறுவழிபாட்டுத் தெய்வங்களாக இருந்து பின்னால் இந்துமயமானவை.. சில இந்துமதத்தின் தெய்வங்களாகவும் இருக்கின்றன. உதாரணமாக நற்றிணையில், (பாடல்-82)

''முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல...
காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடகாளின்"31

காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடுகாளின் மகன் முருகு (முருகன்), மற்றொரு தாய்த்தெய்வமான வள்ளியை மனைவியாக்கினான்.

இங்கு முக்கியமாக முருகுவின் தாய் மட்டும் கூறப்படுகின்றது தந்தை பற்றித் தெரியாதநிலை காணப்படுகின்றது.

இதுபோல அப்பருடைய தேவார வரிகள், இதற்குச் சான்று தருகின்றது.

''செல்வியைப் பாகங்கொண்டார் சேந்தனை மகனாய்க் கொண்டார்
மண்ணினை உண்ட மாயன் தன்னையோர் பாகங் கொண்டார்"143

தாய்த் தெய்வமான செல்வி, முருகன், சேந்தன் (அய்யார்), மாயோன் போன்றவர்களுக்கிடையில் உறவுமுறையை இந்து மதம் ஏற்படுத்தியதைக் காட்டுகின்றது.

எப்படி இந்துமதம் பின்னால் வளர்ச்சி பெற்றது என்பதை இது காட்டுகின்றது.

நாம் இனி இந்த வளர்ச்சியின் ஆபாசத்தையும், வக்கிரத்தையும் புராண மற்றும் இந்து வரலாற்று இலக்கியம் மூலம் ஆராய்வோம்.
---------------------------

இராமாயணத்தின் கதாநாயகன் இராமனின் பெயரில் ஒரு வானரக்கூட்டம் இன்று இந்தியாவில்; ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றும், கற்பழித்தும் போடும் கூத்தின் பின்னால், இராமாயணப் புராண இலக்கிய வரலாறு மண்டிக்கிடக்கின்றது.

இந்த இராமாயணம் உருவாகக் காரணம், விஷ்ணு தனது மனைவி இலட்சுமியைப் புணர்ந்ததால் ஏற்பட்டதாம்.

இதுபோல் கந்த புராணம் ஏற்பட காரணம் சிவன் உமாதேவியாருடன் நூறு வருடம் விடாமல் புணர்ந்து கொண்டிருந்ததால், வீரியமும் கர்ப்பமும் கொடுமை செய்துவிடும் என்று தேவர்கள் அஞ்சி முறையிட்டதால், கலவி முற்றுப்பெறுமுன் சிவன் நிறுத்தியதால் இந்திரியம் நிலத்தில் விழுந்து நிறைய ஆபாசமாகி இறுதியாகச் சுப்பிரமணியன் தோன்றவும், கந்தபுராணம் உருவாகவும் காரணமாகி விடுகின்றது.

இந்த மாதிரி இந்து மத வக்கிரத்தை நாம் போற்றுகின்றோம்;?!

இனி நாம் இராமாயணத்தைப் பார்ப்போம்;.

இந்த இராமாயணம் இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்த இராமனின் சொந்தத் தந்தை தசரதன் அல்ல.

தசரதன் மூன்று பெண்டாட்டியையும், 60 ஆயிரம் வைப்பாட்டிகளையும் வைத்திருந்தவன்;.

மூன்று பெண்ணுக்கும் குழந்தை பிறக்காததால், சிரங்கன் இடம் மூன்று பெண்ணையும் ஒப்படைத்து யாகம் செய்தான்.

இந்த யாகத்தில் மூன்று பிண்டங்களைப் பிடித்து உண்ணக் கொடுத்ததால் மூவரும் கர்ப்பமாகிக் குழந்தை பெற்றனர் என்கிறது, இராமாயணம்;.

இங்கு மூன்று பெண்களின் தந்தை சிரங்கன் என்பது, இன்று மரத்தைச் சுற்றி பிள்ளை பெறும் பக்தியின் பின்னால் வேறு ஆண்களுடன் புணர்ச்சி நடப்பதும், கர்ப்பம் தரிப்பதுமே நிகழ்கின்றது.

தசரதன் அல்லாத சிரங்கனுக்குப் பிறந்த இராமனை, இராவணன் தங்கை சூர்ப்பநகை தன்னைத் திருமணம் செய்யும்படி கேட்டதால், அவளின் மூக்கு, முலை, முடி போன்றவற்றை வெட்ட உத்தரவிட்டதன் மூலம் இராமன், பெண்களைக் கொச்சைப்படுத்துகின்றான்.

ஒரு பெண் ஆணை விரும்பி திருமணம் செய்யக் கோருவது குற்றமா?

இதை இராமாயணம் மறுக்கிறது. பெண்ணின் உடலைச் சிதைப்பதுதான் இராமாயண நீதி. இன்று பெண் மீதான சித்ரவதைகள் இதுபோன்று இராமனின் வழிகாட்டலில் நடப்பதை நாம் எதார்த்தத்தில் காண்கின்றோம்.

காட்டுக்குச் சென்ற இராமன் சீதையின் மடியில் தலைவைத்துப் படுத்து இருக்கும்போது, கடவுளாகப் போற்றப்படும் இந்திரனுடைய மகன் சயந்தன் காக்கா வேடம் போட்டு வந்து,

சீதையின் முலைக் காம்பைக் கொத்தி தனது பாலியல் வக்கிரத்தைத் தீர்த்த போது, அது குற்றமாகி விடவில்லை.

சீதையின் கற்பின் ஒழுக்கத்தைக் கணவன் சார்ந்து மானம்கெட்டுப் போற்றப்படுகின்றது.

இன்று பெண்களின் முலையை விளம்பர உலகம் முதல் பாடசாலை மாணவர்கள் ஈறாகத் தோல் உரித்து இரசித்துப் பார்க்க விரும்பும் ஆணாதிக்கப் பண்பாட்டையே, இந்து மதம் போற்றி இரசித்த வரலாற்றுக் கதைகள் எழுதியவர்கள், அதன் தொடர்ச்சியில் இன்றும் அதைப் போற்றுகின்றனர்.

சீதை இராமனின் சகோதரி என்ற இராமாயண வரலாறு மூலம், சகோதர - சகோதரி திருமணம் நிகழ்ந்த சமுதாயத்தையே எமக்குக் கோடிட்டுக் காட்டுகின்றது.

வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 இல், இராமன் பல மனைவிமாரை வைப்பாட்டியாக வைத்திருந்ததை அம்பலப்படுத்துகின்றது.

இராவணனை வென்ற இராமன் சீதையைப் பார்க்க மறுத்த நிலையில், ''இராவணனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந்தொல்லையை மேற்கொள்ளவில்லை"33 என்று தனது ஆணாதிக்க வக்கிரத்தை வெளிப்படுத்தினான்.

மேலும் அவன் ''உன் (சீதை) நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்கவேண்டும். உன்னைப் பார்க்கிறதே எனக்குப் பெரும் எரிச்சலூட்டுகிறது. சகிக்கவில்லை.

ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம்... அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா.."33 என்று கேட்கின்றபோது,

தனது நிலையில் நின்றே உரைக்கின்றான்.

தான் இராவணன் இடத்தில் இருந்தால் கற்பழித்திருப்பேன் என்பதையே சொல்லாமல் சொல்லுகின்றான்;.

இந்த இடத்தில் சீதை தெளிவாக அவனை நிர்வாணப்படுத்திக் கூறுவதைப் பார்ப்போம்.

''நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே."33

இந்த இராமன், இராவணனிடம் இருந்து மீட்ட சீதை மீதான ஆணாதிக்கச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அவளைத் தீக்குளிக்கும்படி கட்டாயப்படுத்தினான்;.

கற்பு பற்றி ஆணாதிக்க இறை ஒழுக்கம் வக்கிரம் பிடித்திருப்பதை இது காட்டுகின்றது.

நாடு திரும்பிய பின் சீதை கர்ப்பமாக இருக்கும்போது, வண்ணான் ஒருவன் சீதையின் ஆணாதிக்கக் கற்பு ஒழுக்கத்தை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் சந்தேகப்பட்ட நிலையில்,

இராமன் அதன் வழியில் சீதையின் கண்ணைக்கட்டி, நடுக்காட்டில் துரத்திவிட்டான். இந்த இறைத் தூதர்களின் ஆணாதிக்கம் பெண்வதைகளைக் கொண்டது.

இன்று எதார்த்தத்தில் பெண் மீதான சந்தேகங்கள், அது சார்ந்த சித்ரவதைகள், இதனால் பெண்ணைக் கைவிடுதல் போன்றவற்றின் முன்னோடியான தந்தையாக ஆணாதிக்க இராமன் இருக்கின்றான் என்றால் அதை மறுக்கமுடியாது.

இங்கு இராவணன் சீதையைத் தூக்கிச் சென்று நடத்திய முறைகள் பொதுவான எல்லையில் ஆணாதிக்கக் கண்ணோட்டம் கொண்டவையல்ல.

இராவணன் சீதையைத் தூக்கியதே, தங்கை சூர்ப்ப நகைக்கு நடந்த கொடுமையின் அடிப்படையில்தான்;. இந்த இடத்தில் இதற்காகச் சீதையைக் கொண்டு சென்றது குற்றமே ஒழிய (''வால்மீகி இராமாயணப்படி, சீதை இராமனை விட்டுவிட்டு இராவணனுடன் தானாகவே சென்றாள்."34), இராமன் செய்தது போன்ற இழிந்த ஆணாதிக்கக் குற்றமல்ல.

வரலாற்றில் மத யுத்தங்கள் முதல் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் வரை நடந்ததைப்போல பெண்களைக் கைப்பற்றுவதும், கற்பழிப்பதும், தொடர் விபச்சாரத்தில் தள்ளுவதும், தமது வைப்பாட்டியாக வைத்திருப்பதும் என்ற ஆணாதிக்கக் கொடூரம் எதையும் இராவணன் செய்ததில்லை.

இராவணன் சீதையை விரும்புகின்றபோது, அவளின் விருப்பமின்றித் தொடுவதைக் கூடக் கைவிட்டவன்;. சீதையை இராவணன் தொடாது நிலத்துடன் தோண்டி சென்ற போது, சீதை தனது மேலாடைகளைக் களைந்து எறிந்த நிர்வாணமான நிலையிலும், இராவணன் காமம் கொண்டு சிதைக்கவில்லை. மாறாக, பெண்ணைப் பெண்ணாக மதித்தான்.

இராவணன் பெண்ணைத் தொடுவதால் மண்டை வெடித்துவிடும் என்றால், கற்பழிப்பை வேறுவழியில் நடத்தியிருக்கமுடியும்.

இராமாயணத்தின் நீதி இராவணன் தளத்தில் இருந்து சொல்லப்பட வேண்டிய பல்வேறு தரவுகளை உள்ளடக்கியதே ஒழிய, இதை மறுத்து இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தைச் சொல்லுவதே இராமாயணம்.

சீதையைக் காட்டுக்குத் துரத்திய இராமன் ஆட்சி எப்படி இருந்தது. உத்தர காண்டம் சரகம் 42, 43 இல்,

முறையே சுலோகம் 8,1 இல், ''குடி, கூத்துமாக மாமிசத்தை விழுங்கியபடி, பெண்களைக் கூட்டம் கூட்டமாகக் கொண்டு வக்கிரமான காமப் பசியாற்றுவதில் காலத்தையோட்டினான்;.

சீதை அவனுடன் இருந்த போதும் இதையே செய்ததுடன், சீதையையும் இதில் ஈடுபடுத்தினான்.

இதில் இயல், இசை, நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா, அப்சரசுகள் போன்றவர்களும், பல அழகிகளும் அந்தப்புரத்தில் சிக்கி கிடந்தனர்.

சர்கா 4,2 செய்யுள் 18.21 இல், ''மதுபோதையில் மாமிசத்தைச் சுவைத்தபடி, சீதைக்கு மதுவைக் கொடுத்தபடி, மோகம் கொண்ட இராமன் வனமோகினிகள், நாகா மன்னனின் புத்திரிகள், கின்னரின் கன்னிப் பெண்கள், வேறு கன்னிப் பெண்களும் ஆபாசமாகப் பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தினர்.

சீதையை மீட்ட இராமன் இராவணனின் மனைவி மண்டோதரியைத் துரோகி வீபீஷணனுக்குக் கொடுக்கின்றான். இதுதான் இராமனின் ஆணாதிக்க நீதி.

இதுபோல் வாலியின் மனைவி தாரகையைச் சுக்ரீவனுக்குக் கொடுக்கின்றான். பெண்களை, பெண்களாக ஏற்றுக் கொள்ளாத இந்து மதம், வெறும் பாலியல் நுகர்வுப் பண்டமாகக் கைப்பற்றுவதும் கொடுப்பதுமாகப் பெண்களைச் சிறுமைப்படுத்தியது.

ஆணாதிக்க இராமன் சீதையைக் காட்டிற்குத் துரத்திய பின் சீதை வால்மீகியின் ஆசிரமத்தில் வாழ்கின்றாள். அங்கு இரட்டைக் குழந்தைகளை அவள் பெறுகின்றாள்;.

12 ஆண்டுகளுக்குப் பின் இராமனைக் காணும் வரை, சீதையை இராமன் சென்று பார்த்தது கிடையாது. 12 வருடத்திற்குப் பின் இராமன் செய்த யாகத்துக்கு அழைப்பு திட்டமிட்டே கொடுக்க மறுத்த நிலையில், வால்மீகி சீதையின் மகனை அழைத்துக் கொண்டு யாகத்துக்குச் சென்றான்;.

அங்கு இராமன் மகனைக் கண்டதுடன், சீதை மீதான சந்தேகத்தை மீளவும் சுட்டிக் காட்டினான்.

அதை நிவர்த்திக்க விரும்பினால் சீதை பெரும் மக்கள் கூட்டம் முன்பு மீண்டும் தனது கற்பை நிரூபிக்க வேண்டும் என்றான். சீதை அழைத்து வரப்படுகின்றாள்.

அங்கு இராமனின் அவமானகரமான அவதூறுகளைக் கேட்டுத் தன்னைத்தானே தற்கொலைக்கு இட்டுச் செல்லுகின்றாள்;.

கடவுளாகக் காட்டப்படும் ஆணாதிக்க இராமனின் யோக்கியதை இது.

இதுதான் இந்தியாவின் இந்து ஆணாதிக்கமாகும்.

ஒரு பெண்மீதான அவதூறுகள், இழிவுகள் இராமனின் வழியில் இன்று இந்துப் பண்பாடாக இருப்பது சமுதாயத்துக்கே கேவலமானது. இந்தக் காட்டுமிராண்டித்தனத்துக்கு முடிவுகட்டாத வரை நாம் மனிதனாக வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கின்றது.

வானரங்கள் என்று இராமாயணத்தில் அழைக்கப்படுவோர் யார்?

பிரம்மதேவனின் கட்டளையை நிறைவேற்ற கடவுள்கள் நடத்திய கற்பழிப்பில் பிறந்தவர்களே வானரங்கள். அழகிகளான அப்சரசு, விலைமாதர்கள், பருவமடையாத பெண்களைக் கற்பழித்தபோதும்,

நாகர்கள் மற்றும் யக்ஷசர்களுடைய மணமாகாத பெண்களையும், திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா, வித்யாதர், கந்தர்வர்கள், கிண்ணர்கள், வானவர்களுடைய மனைவிமார்களைக் கற்பழித்தபோது ஏற்பட்ட கலப்பில் பிறந்தவர்களே, இராமனுக்கு உதவிய வானரங்கள்.

அன்று பெண்கள் மீதான கற்பழிப்புகள் இறைக் கட்டளையாகக் கூறி பெண்கள் மீது நடத்திய கொடுமைகளே இன்று, இராமனின் பெயரால் முஸ்லிம் பெண்கள் மீதான கற்பழிப்பாக மாறியுள்ளது.

இன்று இவை இராமன் என்ற கடவுளின் பெயரில் நடப்பதுதான் வேறுபாடு.


கட்டுரை ஆக்கம்: பி.இரயாகரன்
கட்டுரை ஆக்கம் தள‌ம்: http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1877:2008-06-10-19-42-25&catid=71:0103 யில் ஒரு பகுதி.வளரும்......


இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 1.

இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 2.

இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 3.

Thursday, May 3, 2012

இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 3.

கடவுள்களின் ஓரினச் சேர்க்கைக் கூத்தை, இன்றைய ஓரினச் சேர்க்கையாளர்கள் ஜனநாயகம் சார்ந்த பெண்ணியக் கூறாகக் கொண்டாடலாம். ஆனால் அந்த ஆணாதிக்க வரலாற்றைப் பார்ப்போம்.

ஐயப்பனின் பிறப்பு விசித்திரமானது. இரண்டு ஆண் கடவுள்களுக்கிடையில் நடந்த ஓரினச் சேர்க்கையில் பிறந்த கடவுளே ஐயப்பன் ஆனான்.

பத்மாசூரன் என்பவன் சிவனை நோக்கிக் கடும் தவமிருந்ததால், சிவன் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்டாராம். அவன், நான் யார் தலையில் கைவைத்தாலும், அவர்கள் எரிந்து சாம்பல் ஆகவேண்டும் என வேண்டினாராம். சிவன் ஆகட்டும் என்று வரத்தை வழங்கினாராம்.

உடனே வரம் பலிக்கின்றதா என்று பார்க்க சிவனின் தலையில் கைவைக்கப் போவதாகக் கூற, சிவன் ஓடத் தொடங்கினாராம். இதைத் தொடர்ந்து சிவன் அழிந்து விடுவாரோ என்ற நிலையில், மைத்துனர் மகாவிஷ்ணு அழகிய பெண் மோகினி வடிவம் எடுத்து அவன் முன்தோன்றினாராம்.

மோகினியைக் கண்ட பத்மாசூரன் அவளை மோகித்து புணரத் துடித்தானாம். அதற்கு மகாவிஷ்ணு நீ சுத்தமாக இல்லை, குளித்துவிட்டு வா என்று கூற, அவன் குளிக்கத் தண்ணீர் தேடி அலைந்து தண்ணீர் இல்லாத நிலையில், என்ன செய்ய என்று கேட்ட போது, சிறு குழியொன்றில் தண்ணீர் உள்ளது, அதில் கையை நனைத்து உன் தலையில் வைத்துவிட்டு வா என்று கூறினாராம். அவன் அப்படி செய்ய அவன் எரிந்து போனான்.

மகிழ்ச்சியடைந்த மோகினி அப்படியே சிவனிடம் செல்ல, ஆணாதிக்கச் சிவனுக்கு அவள் மேல் ஆசைப்பட்டு, புணரத் துடித்தாராம்.

உடனே மகாவிஷ்ணு மோகினி வேஷத்தில் ஓடத் தொடங்க, சிவன் துரத்திச் சென்று விஷ்ணுவின் கையைப் பிடித்தாராம். விளைவு கையில் குழந்தை ஒன்று உருவானதாம். அதாவது வழக்கமான ஆணாதிக்க மொழியில் கையில் போட்டதால் கையப்பன் பிறந்து, அதுவே பின்னால் ஐயப்பன் ஆனான்.

இதையே வேறுவிதமாகக் கூறும் இந்துக் கதைகளில், ஹரியும் ஹரனும் ஓரினச் சேர்க்கையால் உருவான கடவுள்தான் ஐயப்பன். இது கேரளத்தில் நடந்த அருவருப்பான ''அற்புதம்"

ஆணாதிக்க வக்கிரத்தில் உருவான ஓரினப் புணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்துக் கதைகளும், கடவுள்களையும் சுய அறிவற்ற மனிதர்கள் போற்றி வழிபடலாம்.

ஆனால் இந்த ஆணாதிக்க வக்கிரமான ஓரினச்சேர்க்கையின் பண்பாடுகளை ஈவிரக்கமற்ற வகையில் தோலுரித்து போராடவேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

இங்கு சிவனின் ஆணாதிக்க வெறியைக் கேள்விக்கு இடமின்றி இந்து வழிபாடு அங்கீகரிக்கின்றது.

ஒரு பெண்ணைப் புணர்வதற்குப் பெண்ணின் அனுமதி அவசியமில்லை, ஆணாக இருந்தால் அதுவே அங்கீகாரமாகிவிடும் என்றளவுக்கு, இந்து வழிபாட்டுக் கோட்பாடு நிஜ விளக்கத்தைக் கொடுக்கின்றது.

அத்துடன் அழகான பெண் தனது பாலியல் வடிவத்தைக் கொண்டு, எதையும் சாதிக்க முடியும் என்ற விபச்சாரப் பண்பாடு, ஆணாதிக்கப் பெண்ணியல் கண்ணோட்டத்தில் நியாயப்படுத்தப்படுகின்றது. இதை நாம் சகித்துக் கொண்டு வாழமுடியுமா?

தேவகுருவாக இருக்க என்ன தகுதி வேண்டும்? மனு இதை அழகாகவே இந்து மனுதர்மத்தில் கூறுகின்றார்.

''ஸீத்ருகொ மதனாவஸம் ப்ரஜபேன்மனும்;
அயுதம் ஸோசிராதேவ வாக்பதே; ஸமதாமியாத்"37

அதாவது ஓர் அழகிய பெண்ணின் பெண் உறுப்பைப் பார்த்துக் கொண்டு பத்தாயிரம் முறை மந்திரம் சொல்லுபவன் தேவகுருவுக்குச் சமமாவான் என்கிறது இந்து மதம்.

ஆணாதிக்க வக்கிரம் கொப்பளிக்கின்ற போது, எல்லா ஆணாதிக்கக் கூத்துகளுமே இந்து மத ஆன்மீகமாகும்.

விரும்பிய பலன்கள் கிடைக்க நிர்வாணமாக இரவில் தலைமயிரை அவிழ்த்து விட்டபடி, பதினாயிரம் முறை ஜெபம் செய்யவேண்டும் என்று இந்துமத ஸ்மிருதிகள் கூறுகின்றன.

இவர்கள் தான் சாதியினதும், ஆணாதிக்கத்தினதும் தலைசிறந்த கொடுங்கோலராவர்.

அரசனாக விரும்புபவன் என்ன செய்யவேண்டும் என்று இந்த மத ''மஹோநதி" நூல் கூறுவதைப் பார்ப்போம்.

''சாவம் ஹ்ருதய மாருஹ்ய நிர்வாஸா, ப்ரேத பூகத்:அர்க்கபுஷ்ப
ஸஹஸ்ரேணாப்யக்தேன ஸ்வீயரேதஸா தேவீம்ய: பூஜ யேத்
மகத்யா ஜப்ன்னே கைக சோமனும் ஸோசிரேணைவ காலேன
தரணீப்ரபுதாம் வ்ரஜேத்"37

அதாவது, சுடுகாட்டில் நிர்வாணமாகப் பிணத்தின் மார்பில் உட்கார்ந்து கொண்டு, தனது வீரியத்தில் (ஆண் விந்து) தோய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் ஒவ்வொரு தடவையும் மந்திரஞ்சொல்லி தேவியைப் பூசை செய்கிறவன் வெகு சீக்கிரத்தில் அரசனாவான்.

பாலியல் வக்கிரத்தில் இருந்து வழிகாட்டும் இந்துமதம், எப்படிப்பட்டது என்பதற்கு இவைகளே சாட்சிகள்.

இந்த ஆபாசமான கூத்துகளைப் பார்ப்பனர் அல்லாத மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதால் தான், சமஸ்கிருத மொழியில் ஆணாதிக்க ஆபாசமாக வக்கிர மந்திரம் சொல்லி மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கின்றனர்.

சிவனுக்குச் சமமான தகுதியடைய என்ன செய்யவேண்டும்?

''... சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்; மஹாகாலேன தேவனே
மாரபுத்தம் ப்ரயூர் வதீம், தாம் த்யாயேத் ஸ்மோவதனாம்
விதத்ஸீரதம் வையம் ஜபேத் ஹைஸ்ரம்மிய: ஸசங்கரஸமோ
பவேந்"37

- என்று இந்துமத நூலான மஹோநதி கூறுகின்றது.

இதன் அர்த்தம், பிணத்தின் மார்பில் இருந்து மகாகாலனைப் புணர்ந்து கொண்டிருப்பவளும், புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடையவளுமான தேவியைத் தியானித்தபடி, ஒரு பெண்ணுடன் புணர்ந்தபடி ஆயிரம் உருவேனும் ஜெபிக்கின்றவன் சிவனுக்கு ஒப்பாவான்.

இந்து மத சிவன் பக்தர்கள் முதல் அனைத்து பக்தர்கள் ஈறாக இதை எப்படிப் போற்றமுடிகின்றது?

இவை பெண்கள் மீதான வக்கிரமான ஆணாதிக்கப் பார்வையில் இருந்தே, இந்துமதக் கோட்பாடுகள் தனிப்பட்ட சொந்த நலன் சார்ந்து வக்கரித்து சொன்னவைகளேயாகும் என்பதை இது காட்டுகின்றது.


இதையொத்த மற்றொரு வக்கிரத்தைப் பார்ப்போம்.

கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி நடு இரவில் நீராடி, சந்தனம் இட்டு, சிவந்த மாலை அணிந்து, சிவந்த உடையணிந்து தனியிடத்தில் இருந்து கொண்டு, இளமையும் அழகும் நிறைந்த ஐந்து ஆண்களைப் புணரக் கூடிய புன்சிரிப்பும் அவிழ்த்துவிட்ட கூந்தலையுமுடைய பெண்ணுக்கு, ஆடை அணிகள் கொடுத்து, மகிழ்ச்சியுண்டாக்கி, பின் அவளின் ஆடைகளை, அகற்றி நிர்வாணமாக்கிப் பூசிக்கவேண்டும்.

பின் அவளைப் புணர்ந்து பத்தாயிரம் மந்திரம் சொல்பவனுக்குச் செல்வம், ஆயுள், புத்திரப்பேறு, சுகம், நல்ல மனைவி கிடைக்கும். பாவங்கள் அவனை அணுகாது. ஆறுமாதம் காலையில் எழுந்து நூறு உரு ஜெபித்தால் சுக்கிராச்சாரியை விடச் சிறந்த கல்விமான் ஆவான். இவ்வாறு பூசா விதியையும் அதன் பலன்களையும் இந்து மதம் கூறுகின்றது.

புணர்வதற்கு, அதுவும் வக்கரித்து இவ்வாறு செய்வதன் ஊடாக நல்ல மனைவியை அடைவான் என்று கூறும் இந்துப் புரவலர்களின் ஆணாதிக்க வக்கிரங்கள்தான் இவை.

சுக்கிராச்சாரி போன்ற மண்டைக் கிறுக்கர்களின் அறிவு உளறல்தான் இவை என்று இந்தக் கூத்தின் மூலம் அம்பலமாகின்றது.

அதாவது அழகுராணி போட்டி போன்றனவற்றின் தோற்றத்துக்கு இந்துமதமே மூலமாகின்றது அல்லவா?

ஆடை கொடுத்து, அதை விதவிதமாக அவிழ்த்துவிட்டு, இரசித்துப் புணருவதே இன்றைய ஏகாதிபத்திய அழகுராணிப் போட்டி. இதையே இந்து மதம் செய்து புணரும்போது அங்கு செல்வம், ஆயுள், புத்திரப்பேறு, சுகம், நல்ல மனைவி கிடைப்பாள் என்பதன் ஊடாக இருக்கும் ஒற்றுமைதான், அண்மையில் இந்தியாவில் நடந்த அழகுராணிப் போட்டிகளும் தெரிவுகளும்.

குழந்தை பெற வேண்டுமா அதற்கும் வழியை இந்துமதம் கூறுகின்றது.

வேதங்கள் இதிகாசங்கள் கூறும் புத்திரக் காமேஷ்டி யாகத்தின் மூலம் எதைச் செய்யச் சொல்லுகின்றது எனப் பார்ப்போம்;.

புத்திரன் வேண்டுபவன் தனது மனைவியைக் குதிரையின் அருகில் அனுப்பிவைப்பான். அவள் அருகில் சென்று,

''1. கணானாம் த்வா, கணபதிம் ஹவாமஹே (வஸோமம)

2. ப்ரியாணாம் த்வா: ப்ரியாபதிம் ஹவாமஹே (வஸோமம)

3. நதீனாம் த்வா நிதிபதிம் ஹவாஹமஹே (சோமம)"37

- என்று கூற வேண்டும்.

இதன் அர்த்தம், ''ஓ குதிரையே! கணங்களின் தலைவனும், விருப்பத்தை நிறைவேற்றும் தலைவனும், பொருட்களின் தலைவனும் ஆகிய உன்னை அழைக்கின்றேன். நீ எனது கணவனாக இருக்கவேண்டும்.

பிறகு பெண் குதிரைக்கு அருகில் படுத்துக் கொண்டு, ''ஓ குதிரையே! கர்ப்பத்தை உண்டு பண்ணுகிற வீரியத்தை இழுத்து யோனியில் இடுகிறேன். அதேபோல் நீயும் செய்ய வேண்டும்."37

இப்படி சொன்னவுடன் பெண்ணைத் துணியொன்றால் மூடிவிடவேண்டும். அவள் அதன்பின் ''விந்துவைத் தன்னுள் வைத்துக் கொண்டிருக்கின்ற குதிரை அதை என்னிடத்தில் வைக்கட்டும்;"37

பிறகு ஆண் குறியைத் தனது கையால் பெண் குதிரையின் யோனியில் வைப்பாள். பின் ஆண் குதிரையி;டம் சென்று, நான் செய்யும் காரியத்தை எனக்குப் பதிலாக நீ செய்ய வேண்டும் என்று வேண்டுவாள்.

இதையே யஜீர் வேதத்தில் புத்திரக் காமேஷ்டி செய்யக் கோருகின்றது.

இராமனைப் பெற்ற மலட்டுத் தசரதன் செய்த யாகமும் இதுதான்.

இன்று குழந்தை வரம் வேண்டிக் கோயில் செல்லும் பெண்கள், மலட்டுக் கணவன் ஊடாக அல்லது ஆணாதிக்க வக்கிரத்தில் முன்கூட்டியே விந்தை இழக்கும் கணவனுக்குக் குழந்தையைப் பெற முடியாது.

அவர்கள் கோயில் பூசாரிக்கு மட்டுமே குழந்தையைப் பெற்றுப் போடமுடியும்.

குழந்தை பெற இந்து மதம் மிருகத்துடன் புணரும்படி முன்வைக்கும் இந்து வேத வக்கிரங்களில், உண்மையில் யாகம் செய்யும் முனி பார்ப்பனர்களின் ஆணாதிக்கக் காம இச்சையை அப்பெண்களிடம் தீர்க்கும் மாற்று வழியாகும்.

இந்தப் பார்ப்பனர்கள் திருமணத்துக்கு முன் பெண்ணை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டிருந்ததுடன், பார்ப்பனர்களைப் புணர்வது பெண்களின் புண்ணியத்தைக் குறிக்கும் என்ற இந்துப் பண்பாடுகளும் சமுதாயத்தில் இருந்துள்ளது.

இழந்துபோன பல சொர்க்கத்தை மீளக் கொண்டு வரும் இந்து இராஜ்ஜியக் கனவை அடிப்படையாகக் கொண்டே, இன்று மீளவும் பாசிசச் சதிராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

தங்கமும் வெள்ளியும் உருவான வக்கிரத்தைப் பார்ப்போம்.

மகாவிஷ்ணு மோகினி வேஷம் போட்டு அசுரர்களை மோகிக்கும் படி செய்வதாக அறிந்த பரமசிவன், கைலாயத்தில் இருந்து பார்வதியுடன் அவரைக் காணச் சென்றாராம்.

அவரிடம் மோகினி வேஷத்தைப் பார்க்க வேண்டும் என்று சிவன் கேட்டாராம். அதற்கு மகாவிஷ்ணு, காமுகர்தான் அதை வணங்கி மோகிப்பர் என்ற கூறி மறைந்தாராம்.

சிவன் அவரைத் தேடியபோது, பெண் வேஷத்தில் பெண்கள் விளையாடிக் கொண்டிருந்த மைதானம் ஒன்றில் நின்றாராம். சிவன் மகாவிஷ்ணு மீது மோகம் கொண்டு மனைவி உமாதேவி நிற்பதையும் கூட எண்ணாது காமம் கொள்ள, மகாவிஷ்ணு பந்தடிக்கும் கவனத்தில் ஆடையை நழுவவிட்ட நிலையில், சிவன் நிற்பதைக் கண்ட மகாவிஷ்ணு என்ற மோகினி மரத்தின் பின் ஒளிந்தாள்.

சிவன் அவளைப் பிடிக்க அவள் திமிரியபடி நிர்வாணமாகத் தலைவிரி கோலமாக ஓட, சிவன் துரத்தியபடி தன்னுடைய ஆண்விந்தைக் காம வெறியில் சிதறவிட்டபடி துரத்தினர். விந்து வெளியேறிய நிலையில் மகாவிஷ்ணு மறைந்து போனாராம்.

சிவனின் விந்து எங்கு எங்கெல்லாம் விழுந்ததோ, அவைதான் தங்கம், வெள்ளியாகிப் போனதாம்.

நம்புங்கள்; இந்த இந்து மத வக்கிரத்தை.

பெண்கள் நீராடி, அழகுபடுத்தி தலையவிழ்த்து கோயில் செல்லும் போது, வீதி தோறும் நிற்கும் ஆணாதிக்கச் சிவன்கள் எல்லாம் இந்தக் கூத்தைத்தான் செய்கின்றனர்.

கும்பிடும் கோயில் சிற்பங்கள் புணர்வின் வக்கிரத்தில் பக்தியின் பின்னால் அரங்கேற்றுவதையே இந்துமதம் எமக்குப் போற்றித் தருகின்றது.

ஆணாதிக்கச் சிவன் தனது மனைவியைத் தாண்டி மற்றைய பெண்களைப் புணரும் தன்மையும், வக்கிரமும் நியாயப்படுத்தும்போது உரிமை மறுக்கப்பட்ட பெண் கவர்ச்சியால் எதையும் சாதிக்க முடியும் என்கின்றது.

உலகத்தைக் கடவுள் படைத்தான் என்ற கற்பனைகள் போல், தங்கம் வெள்ளி கதையும், இந்து மதத்தின் பொய்மையை ஆணாதிக்க வக்கிரத்தினூடாக அம்பலப்படுத்துகின்றது.

பெண்கள் தமது மார்பை இந்தா பிடி என அழைப்பவர்கள் என்று கருதும் ஆணாதிக்க ஆண்கள் சிவனின் அதே வாரிசுகள்தான். இன்று சினிமா முதல் ஆணாதிக்கப் பண்பாட்டுத் தளம் பெண்ணின் மார்பைச் சிவனைப் போல், மோகித்து காட்டும் எல்லா விளம்பர மற்றும் கலை இலக்கியக் கோட்பாடுகள் வக்கிரத்தின் உச்சமான பன்றித்தனமாகும்;.

இன்றைய ஜனநாயகச் சமுதாயம் ''காதலைப் பாலியல் வெறியாகவும், மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும், துயரத்தை விரக்தியாகவும்" (ஏப்பிரல் மே 2000)48 மாற்றிவிடும்

இன்றைய பண்பாடுகளின், இறுகிய ஆணாதிக்க வக்கிரத்தையே அன்று முதல் இந்துமதம் உருவாக்கி வளர்த்தெடுத்தது. நீங்கள் கழுத்திலும், மார்பிலும் தவளவிடும் தங்கம், வெள்ளி எல்லாம், சிவனின் விந்தாக இருப்பதையே இந்து மதம் பெண்களுக்கு அறிவ+ட்டுகின்றது.

இந்து மதத்தை வழிபடும் மானம் வெட்கமற்ற ஆண்கள், குறிப்பாகப் பெண்கள் இதைச் சகித்துக் கொள்ளலாம்;. ஆனால் அறிவுள்ள மானவெட்கம் உள்ளவன் இதை எப்படி சகித்துக் கொள்வது.

இதை வேரறுக்க இந்து மதத்தையே நொறுக்கவேண்டும்.

பெண்களை நிர்வாணமாக்கி இரசித்த ஆணாதிக்கக் காமுகன் சிவன் இந்துக்களின் கடவுள்.

''இராவணனின் மனைவி மண்டோதரியை இச்சித்துப் புணர்ந்ததும், அருந்ததியிடம் அவளை இச்சித்து நிர்வாணமாகப் பிச்சை போடும்படி கேட்டும், சிவன் சாபம் பெற்று சிசுவானது ஆணாதிக்கக் காமமாகும்."34

இதே சிவன் துரோணாச்சாரி மனைவியிடம் விருந்து சாப்பிட சென்ற இடத்தில், ஆணாதிக்க வக்கிரக் காமம் கொண்டு விந்து வெளியேற்றிய நிகழ்ச்சியைப் போற்றும் இந்துமதம் பெண்களின் எதிரியல்லவா?

இன்றைய சினிமா, இன்றைய விளம்பரங்கள், இன்றைய டிஸ்கோக்களின் தந்தை சிவன் என்றால் தவறோ?

உலகமயமாதல் பெண்ணை உரிந்த நிர்வாண நுகர்வு வக்கிரத்தில், மூலதனச் சந்தையை ஜனநாயகப்படுத்தி பெண்ணியமாக்கும் வழியில், உலகை வீரநடை போட வைக்கும் ஆணாதிக்கப் போக்குக்குச் சிவன் தந்தையல்லவா?

இதனால் தான் இந்து இராஜ்ஜியத்தை உருவாக்க பிரகடனம் செய்பவர்கள், ஏகாதிபத்தியத்திடம் சோரம் போகின்றனரோ?

வள்ளியம்மையின் பிறப்பும் மிருகப்புணர்ச்சியாகும்;.

காசிபர் மானுடன் புணர்ந்து வள்ளியம்மையைப் பெற்றார்.

இந்தக் கடவுள்களை, புராணங்களை, இதிகாசங்களை நாம் பின்பற்றலாமா? இவை ஆணாதிக்க வக்கிரப் புத்தியல்லவா?

விபச்சாரியிடம் சுந்தரமூர்த்திக்காகத் தூது போன சிவனின் ஒழுக்கம் என்ன?

சுந்தரமூர்த்தி நாயனார் ஆணாதிக்க இந்து மதத்தைப் பாதுகாக்க மக்களுக்கு எதிராக, பார்ப்பனருக்காகப் பொய்யும் புரட்டுகளையும் கூறித்திரிந்த போது,

இரண்டாவது வைப்பாட்டியாக விபச்சாரி மீது ஆசை கொள்ள,

அவள் மறுக்க, சிவன் தரகு வேலை பார்த்து (ஏகாதிபத்தியத்துக்குச் செய்வது போல்) கடவுளின் பெயரில், சுந்தரமூர்த்தி நாயனாரின் ஆணாதிக்கக் காமத்தைத் தீர்த்து வைத்தார்.

இதை நாம் போற்றலாமா?


ஆக்கம் : பி.இரயாகரன்
தள‌ம்: http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1877:2008-06-10-19-42-25&catid=71:0103
யில் ஒரு பகுதி.

வளரும்.

இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 1.

இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 2.

இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 3.

இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 4.

Wednesday, May 2, 2012

இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 2.

கற்பழிக்க வழிகாட்டுகின்றார் கடவுள்.

எதிரியை தோற்கடிக்க எதிரியின் மனைவியை கற்பழிக்க சிவன் வழிகாட்டுகின்றார்.

இந்து மதத்தின் மூத்த கடவுள் சிவனுக்கும் சங்காசுரனுக்கும் 100 வருடமாக யுத்தம் நடந்ததாம்.

சங்கரன் என்ற அசுரனை கடவுளால் கொல்லமுடியவில்லையாம். ஏன் என்று ஆராய்ந்த சிவன் காரணத்தை கண்டறிந்தாராம். சங்கரனின் மனைவி கற்புடையவள் என்பதால் சங்காசுரனை அழிக்கமுடியாது எனக் கண்டராம்.

சிவன் சங்காசுரன் வேடம் போட்டுச் சென்று துளசியை கற்பழித்தபின், சங்காசுரனைக் கொன்றாராம்.

இதன் பின் துளசி உண்மை அறிந்து "ஓ! விஷ்ணு, கல்நெஞ்சம் படைத்த வஞ்சகனே! என் கணவரைச் சதி செய்து கொன்று விட்டாய். நீ கல்லாக போ!"148 என்ற சபித்தாள்.

மகாபாசுவத புராணம் (9,24,25) இல் கீழ் சாதி பெண் இகழ்ந்தாலும், மேல் குலத்தைச் சேர்ந்தவன், பெண்ணின் கற்புரிமையை அழிக்க தர்மசாஸ்திரம் அங்கீகரிப்பதுடன், இது மேல் சாதிப்பிரிவின் பெருமையை கொடுப்பதாகும் என்று விளக்கி கற்பழிப்பை ஊக்குவிக்கின்றது.

துளசி கீழ் சாதிப் பெண்ணாக இருப்பதால் அவளை கற்பழித்த சிவனின் வெற்றியை இந்து மதம் போற்றுகின்றது.

இதை புராணமாக கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து ஆணாதிக்க மரப்பில் அங்கீகரிக்கின்றோம்.

இந்த இந்து மதத்தை பெண்கள் எப்படி போற்றமுடியும்.

சங்கரனின் (சிவனின்) காமம் பெண்களை ஓடவைக்கின்றது. சிவனுக்கு காமம் ஏற்பட மோகினியை கட்டிப்பிடிக்க அவள் தப்பிஒடினாளாம்.

அதை மாதா பாகவத புராணம் பெண்யானையை காமம் பிடித்த ஆண் யானை விரட்டுவது போல், மோகினியை சங்கரன் துரத்திச் சென்றாராம்.

வீதிக்கு வீதி இன்று ஆணாதிக்க வக்கிரத்தால் காமம் மேலிட, வதைக்குள்ளாகும் பெண்கள் படும்பாட்டை நாம் அறிவோம்;

ஆனால் நாம் வழிபடும் கடவுள் சிவனும் இதைத்தான் செய்தான் என்று தெரிகின்ற போதும், அதை நியாயப்படுத்தும் போதும், இதை சகித்து வழிபடுவது கேவலமானது.

பெண்கள் கற்பழிக்க மறைமுகமாகவும், நேரடியாகவும் துணைபோவதாகும். என்ன செய்வது என்பது எம்முன்னுள்ள அடிப்படையான கேள்வியாகும்.

ஆக்கம் : kirubans
தள‌ம்:http://www.yarl.com/forum/index.php?showtopic=5318&st=60 யில் ஒரு பகுதி.


பிள்ளையார் வரலாறு.
பெண்கள் மீது சிவபெருமான் முதல் கொண்டு கடவுள்களின் சேட்டைகளால் உருவானதே. இந்தப் பிள்ளையாரைக் கொண்டே இன்று மதத்தின் பெயரில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.

பிள்ளையார் பிறப்பு வியக்கத்தக்க ஆணாதிக்கப் பாலியல் வக்கிரங்கள் பல கொண்டது, பலபிறப்பு வரலாற்றையும் கொண்டதாகும். அவைகளைப் பார்ப்போம்.

1. சிவமகாபுராணத்தில், பார்வதியார் குளிக்கப்போனபோது உள்ளே யாரும் வராது இருக்க, தனது உடலில் இருந்த ஊத்தையைப் (அழுக்கு) பிராண்டி அதற்கு உயிர் கொடுத்து, அதைக் காவல் வைத்துவிட்டுச் சென்றார். சிவபெருமான் வந்து உள்ளேபோக முற்பட்டபோது சிவபெருமானுக்கும், பிள்ளையாருக்கும் மோதல் ஏற்பட, அதில் பிள்ளையாரின் தலை வெட்டப்படுகின்றது.

உமாதேவியார் தனது குழந்தையை வெட்டியதைக் கண்டு புலம்ப, சிவபெருமான் யானைத் தலையை வெட்டிப் பொருத்தியதாகப் பிள்ளையார் வரலாறு கூறுகின்றது. இங்கு தெய்வமான உமாதேவியாரின் குளிக்கும் அறைக்குள் போகும் அளவுக்குத் துணிவுள்ளவர்கள் யார்? இது ஆணாதிக்க ஆண் கடவுள்கள் என்பதும் தெளிவாகின்றது.

எனவே, கடவுள்கள் ஆணாதிக்கம் கொண்டவை என்பதையும், பெண் தெய்வங்கள் பாதுகாப்பற்ற எல்லையில் வாழ்ந்ததையும் காட்டுகின்றது.

பெண்கள் தமது கற்புரிமையைப் பாதுகாக்க ஆண் கடவுள்களுடன் போராட வேண்டியிருந்ததை அம்பலப்படுத்துவதுடன், கடவுளின் பொய்மை, நீதி அம்பலமாகின்றது.

இந்த ஆணாதிக்க ஆண் தெய்வங்களிடம் தமது பாதுகாப்பை வேண்டி வழிபடும் பெண்கள் எப்படிப் பாதுகாப்பைப் பெறமுடியும். ஏனெனில் அந்தத் தெய்வங்களே பல வக்கிரங்களில் பிறந்ததுடன், கற்பழிப்புகளும் கூடிய வன்முறைகளில் ஈடுபட்டவர்கள்.

பெண்கள் தமது உடுப்பை மாற்றும் அறையில் வைத்திருக்கும் ஆண் தெய்வங்களும் சரி, தூண்துரும்பில் இருக்கும் தெய்வங்களும் சரி, பெண்களின் நிர்வாணத்தை, ஆணாதிக்க இரசனையில் இரசிக்கின்றன அல்லவா?

இதைத்தான் பிள்ளையார் கதை தெளிவாக்குகின்றது.

கற்பழிப்பு முதல் கடவுள்களின் வக்கிரங்கள் எல்லையற்றவை. அவைகள் பலவற்றை இக்கட்டுரையில் தொடர்ந்து பார்ப்போம்.

2. ஒருநாள் ஆண் யானையும், பெண் யானையும் புணர்வதைக் கண்ட சிவனும் பார்வதியும், அந்த நினைவில் அவர்கள் புணர்ந்ததால் யானை முகத்துடன் பிள்ளையார் பிறந்தாராம்.

இதுபோல் மற்றொரு கதையில் சுவரில் ஆண் யானை, பெண் யானையைப் புணர்வது போன்று கீறியிருந்த காட்சியை பார்வதியும் கண்டு, அதுபோல் சிவனும் புணர்ந்ததால் பிள்ளையார் பிறந்தாராம்.

அருவருக்கத்தக்க புணர்ச்சி வக்கிரத்தில் தெய்வங்கள் திரிந்தன என்பதைக் கூறும்போது, இந்த மாதிரி கற்பனைகளை உருவாக்கிய நபர்களின் பிம்பம் பிரதிபலிக்கின்றது.

மிருகங்களின் புணர்ச்சிகளை இரசிக்கும் மனிதப் பண்புகள் மிருகத்தைவிட இழிவானவை.

இதில் இருந்துதான் வக்கிரமான நீலப்படங்கள் (புள+பிலிம்) மனிதப் புணர்ச்சியையும் மிருகத்துடன் மனிதன் கலந்த புணர்ச்சியையும் சட்டப்பூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் ஜனநாயகச் சந்தையில் மூலதனமாக்கிக் கொடிகட்டி பறகின்றது.

3. பார்வதி கருவுற்று இருக்கையில் சித்துரா அசுரன் (இந்தியாவின் ஆதி மக்களைக் குறிக்கும் சொல்) ஒருவன் காற்று வடிவில் கர்ப்பப் பைக்குள்; சென்று, பிள்ளையார் தலையை வெட்டி விட்டுவந்த நிலையில், பார்வதி யானைத் தலை கொண்ட கஜாசுரன் தலையை வெட்டி ஒட்டவைத்ததாகப் பிள்ளையார் வரலாறு கூறுகிறது.

முட்டாள்களே நம்புங்கள்! இந்தப் புளுகு மூட்டையை! இறைவன் வாழும் உலகில் அசுரர்கள் எப்படி வாழ முடியும்? இது எப்படி மனிதனுக்குத் தெரிந்தது?

4. தக்கனுடைய யாகத்தை அழிக்க சிவன் தனது மூத்த மகனை அனுப்பியதாகவும், அங்கு தக்கன் பிள்ளையாரின் தலையை வெட்டி எறிந்த நிலையில், முருகன் சென்று பார்த்தபோது தலையைக் காணாததால், யானைத் தலை ஒன்றை வெட்டிப் பொருத்தியதால் பிள்ளையாரின் யானை முகம் பிறந்த கதை.

பிறப்புகள் வக்கிரம் பிடித்துக் கிடப்பதைக் காட்டுகின்றது. யாரும் யாகம் செய்தால் அதை அழிப்பது அதர்மம் அல்லவா? என்ன சிவனுக்கு மட்டுமா யாகம் செய்யும் உரிமை உண்டு? இந்த உரிமையின் பிறப்பு எதன் அடிப்படையிலானது? யார் இந்த உரிமையைக் கொடுத்தது? எங்கு எப்போது இந்தப் பிறப்புகள் எல்லாம் நடந்தன?

5. ''பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே"36

- என்ற திருஞானசம்பந்தர் தேவாரம் சிவன் ஆண் யானையாகவும், உமாதேவியார் பெண் யானையாகவும் மாறி புணர்ந்து உருவானவரே பிள்ளையார் என்று பிள்ளையார் பிறப்பை விளக்குகின்றது.

இதையே சுப்ரபேத ஆகமம் என்ற நூலும் கூறுகின்றது. இந்தத் திருஞானசம்பந்தர் உமாதேவியாரின் பெண் உறுப்புகளைத் தனது தேவாரத்தில் பாடிய விதங்கள் பல வக்கிரத்தைக் கொண்டவை.

இதனால்தான் அந்த மூன்று வயது குழந்தைக்கு மார்பில் அல்லாது கிண்ணத்தில் பால் கொடுத்தாரோ. இந்தத் திருஞானசம்பந்தன்

சமணப் பெண்களைக் கற்பழிக்க அருள் கோரி ''பெண்ணகத்து எழில்சாக்கியப் பேய் அமன் தென்னற் கற்பழிக்கத் திருவுள்;ளமே" என்று ஆணாதிக்க இறைவனை வேண்டிப் பாடியவர் அல்லவா.

இவர்தான் தனது சொந்த ஆணாதிக்க வக்கிரத்தை மிருக நிலையில் புணர்ந்து வெளிப்படுத்துகின்றார்.

மனிதப் புணர்ச்சியைவிட மிருகப்புணர்ச்சி தாழ் நிலை விலங்குக்குரிய தாழ்ந்த நிலையல்லவா?

இதை இறைவன் செய்தான் என்பதும், அதைக் கற்பனை பண்ணிப் பாடுவதும் கேவலம்கெட்ட இழிந்த பண்பாடாகும்;.

இந்தத் தேவாரத்தைச் சொல்லி நாம் பாடுவதும் எமது முட்டாள்த்தனத்துடன் கூடிய அறிவின்மையில்தான்.

6. பார்வதி தன் உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்கா நதியின் முகத்துவாரத்தில் உள்ள இராட்சஷி (அரக்கி) மாலினியைக் குடிக்க வைத்ததாகவும், இதன் காரணமாக மாலினி கர்ப்பம் அடைந்து பிறந்த குழந்தையே பிள்ளையார் என்று ஒரு கதை.

எவ்வளவு அருவருப்பைத் தரும் பிறப்புகள். இந்த மாதிரி உருவாக்கிய பிறப்புகள் எல்லாம் ஓரினச் சேர்க்கையில், அதாவது ஒரு பால் உறவில் பிறந்ததாக அல்லவா இருக்கின்றது.

ஓரினச் சேர்க்கையாளர்கள் இறைவனில் இருந்தும், இயற்கைக்குப் புறம்பான தமது வக்கிரத்தை நியாயப்படுத்தலாம். ஆனால் இந்தப் பிறப்புகளின் வக்கிரம் எல்லையற்ற இழிவுகளாக இருப்பது சகிக்க முடியாதவை.

7. ஒருநாள் பார்வதி தனது உடல் அழுக்கைப் பிராண்டி உருட்டி விளையாடியதாகவும், அப்போது அந்த உடல் அழுக்குக்கு அன்பு சொரிந்து உயிரூட்டியதாகவும் (சிறுபிள்ளைகள் போல்) அதுவே பிள்ளையார் ஆனதாக ஒரு கதை. எப்படி சிவபெருமான் அந்த ஊத்தைக்குத் தந்தையாக முடியும்;?

ஒருபால் உறவில் குழந்தை பிறக்கும் அதிசயம் உலகின் அதிசயங்களாகப் பதியாத குற்றத்தை இந்து ஆட்சி நிறைவு செய்யுமோ! மூக்கை நோண்டி, இரசித்து உண்ணும் பண்புபோல் அல்லவா இந்தப் பிறப்புகள் அசிங்கம் நிறைந்து கிடக்கின்றன.

8. பிரம்மாவின் வர்த்தப் புராணத்தில் கணபதி பிறப்பைப் பற்றி, சனிப்பார்வை தோஷத்தால் தலை இல்லாது பிறந்ததால், துயரமுற்ற உமாதேவியாரின் துன்பத்தைத் துடைக்க விஷ்ணு யானைத் தலையை வெட்டி ஒட்டினாராம்;.

இது போல் மற்றொரு கதையில் உமாதேவியாருக்குக் குழந்தை பிறந்ததை அறிந்து, அவரைப் பார்க்க எல்லாத் தேவரும் வந்தனராம். அதில் சனி தேவனும் ஒருவராம்;. சனி, தான் பார்த்தால் குழந்தைக்குத் தீது, உண்டாகும் என்று எண்ணி பார்க்காது தவித்ததாகவும், உமாதேவியார் அதை அவமதித்ததாக எண்ண, அதைத் தவிர்க்க சனி பகவான் குழந்தையைப் பார்க்க, குழந்தையின் தலை எரிந்து போனதாம்.

இதனால் உமாதேவியார் சினம் கொள்ள, கான்முகன் போன்ற தேவர்கள் சமாதானப்படுத்தி சிவன் துணையுடன் யானை முகத்தைப் பொருத்தியதால் பிள்ளையாரானார். எப்படியிருக்கிறது இந்தப் பிறப்பின் பல்வேறு கற்பனைப் பிதற்றல்கள்?

இந்தப் பிள்ளையார் இன்று மதத்தின் ஆதிக்கச் சின்னமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்யும் பலவிதமான கொண்டாட்டங்களைத் தோற்றுவித்துள்ளது.

இந்தக் கொண்டாட்டம் ஆணாதிக்க வெறியர்களின் காமப்பசியைத் தீர்க்கும் கற்பழிப்புகளைச் செய்யும் ஊடகமாகியுள்ளது.

பிள்ளையாரின் பெயரில் செய்யும் சதுர்த்தி இன்று மதக் கலவரத்தின் தூண்டுகோலாக மாறியுள்ளது.

சதுர்த்தி நான்காவது திதி (நாலாம் சடங்கு) என்பது திருமணத்தின் பின் மணமகனும் மணமகளும் உடலுறவைக் குறித்துக் கூடும் நாளைக் குறித்து உருவானது.

ஆனால் இன்று, மதத்தின் பெயரில் நடக்கும் கலவரத்தில் நிகழும் கற்பழிப்புகள் பிள்ளையாரின் பிறப்பைப் போல் வக்கரித்N;த நிகழ்கின்றது.

இந்தியாவில் சிதம்பரம் கோயிலிலும், பிற ஊர்த் தேர் சிற்பங்களிலும் பிள்ளையார் தனது தும்பிக்கையை ஒரு பெண்ணின் பெண் உறுப்பினுள் விட்டு, தூக்கி வைத்திருப்பது போன்ற காட்சிகளின் பின் எழும் ஆணாதிக்க வக்கிரம்,

மனிதப் பண்பாட்டையே வக்கரித்துக் கேலி செய்கின்றது. இதற்கு ஒரு கதையாக அசுர ஸ்திரி, அசுரர்களை அழிக்க, அழிக்கத் தொடர்ந்து உற்பத்தி செய்ததால், அதைத் தடுக்க தும்பிக்கையை விட்டுக் கர்ப்பத்தை உறிஞ்சி எடுத்ததாகப் பார்ப்பனிய வக்கிரம் கூறுகின்றது.

இந்தியாவின் பழங்குடி மக்களை வந்தேறு குடிகளான பார்ப்பனர்கள் அழித்தபோது, நடந்த ஈவிரக்கமற்ற கொலைகளை நியாயப்படுத்துவதே இந்தக் கதை. இன்று உலகில் வெள்ளையின மக்களின் எண்ணிக்கை குறைந்து செல்லும் எல்லையில், வறுமையைக் காரணம் காட்டித் திட்டமிட்டுக் கருத்தடை, கருஅழிப்பு செய்வது எல்லாம் இது போன்ற கோட்பாட்டு அடிப்படையில்தான்.

பெண்ணின், பெண் உறுப்புக்குள் புகுவதே ஆணாதிக்கத்தின் ஒரே நோக்கம் என்பதை, இந்தச் சிற்பங்கள் தனது சொந்த வக்கிரத்தினூடாக நிர்வாணப்படுத்துகின்றது.

லிங்கம் (சிவலிங்கம்) பிறப்பினூடான வழிபாடு ஆணாதிக்க ஆபாசத்தின் தோற்றமாகும்.

பத்மப் புராணம், சரஸ்வதி காண்டம் அத்தியாயம் 17 இல், பிரம்மா நடத்திய வேள்விக்குச் சென்ற சிவபெருமான் குடிபோதையில் காம விகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்து கொண்டாராம்.

இதைக் கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடு நோக்கிச் சென்றனராம். சிலர் சிவபெருமானுடன் உடலுறவு கொண்டனராம்.

இதைக் கண்ட ரிஷிகள் மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க, சிவபெருமானின் ஆண் உறுப்பு அறுந்து விழ, வானம் - பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்ததாம்.

இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தடுக்க உமாதேவியார் தனது பெண் உறுப்பில் ஆண் உறுப்பை ஏந்தி அமைதிப் படுத்தினாராம். இதனால் அந்த ஆணாதிக்க லிங்கத்தை வழிபடுகின்றனர், ஆணாதிக்கப் பக்திமான்கள்.

இதையே லிங்கப்புராணத்தில் ரிஷி ஒருவர் வீடு சென்ற சிவன், அங்கு ரிஷி இல்லாத நிலையில், அங்கிருந்த பெண்ணைக் கட்டாயப்படுத்தி கற்பழித்தாராம்.

இந்தநேரம் வீடு திரும்பிய ரிஷி கற்பழிப்பில் ஈடுபட்ட சிவனின் ஆண் உறுப்பு அறுந்து விழக் கடவ எனச் சாபம் இட, அது அறுந்து விழ, இதனால் உலகம் அழிந்துவிடும் என்று பயந்த பார்வதி, தனது யோனியில் தாங்கிய அந்தப் பிண்டத்தையே வழிபடும் மானம் கெட்டவர்கள் இந்துக்கள்.

கற்பழிப்பை நியாயப்படுத்தி வழிபடும் ஆணாதிக்க இந்து வடிவங்கள், அதிலும் மீண்டும் வக்கிர புணர்ச்சியை உருவாக்கி வழிபடும் பண்பாட்டுக் கோயில்கள் இருக்கும் வரை ஆணாதிக்கம் இந்து இராஜ்ஜியத்தின் பொதுவான ஒழுக்கமாக, சட்டத் திட்டமாக இருப்பது தவிர்க்கமுடியாது அல்லவா?

ஆக்கம்:பி.இரயாகரன்
தள‌ம்: http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1877:2008-06-10-19-42-25&catid=71:0103 யில் ஒரு பகுதி.


வளரும்.

இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 1.

இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 2.

இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 3.

Tuesday, May 1, 2012

இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 1.

1.கடவுள்களின் கற்பழிப்பை இந்து மதம் நியாயப்படுத்தும் போது, பெண்கள் எப்படி இந்து ராஐசியத்தில் கற்புரிமையை பாதுகாக்கமுடியும். இந்து மதம் ஆணாதிக்க மதம் அல்லவா?

இந்து மதப் பிறப்புகள் பல நூறு இது போன்று வக்கரித்த ஆணாதிக்க பிறப்பாகும்.

பெண்கள் மீதான கற்பழிப்புகள், வைப்பாட்டி தனங்கள், விபச்சாரங்கள், ஓரினச்சேர்க்கை, சுய புணர்ச்சி என்ற வகைவகையான பிறப்புகளை, புணர்ச்சிவடிவங்களை இந்து புராண இதிகாசங்களாக இந்து மதம் நியாயப்படுத்தி ஆணாதிக்க வக்கிரமாக காணப்படுகின்றது.

இன்று பாலியலில் புரட்சி செய்வதாக கூறிக்கொள்ளும் பின்நவீனத்துவ சாக்கடைகளின் பாலியல் தந்தைமார்கள், இந்து பார்ப்பனிய ஆணாதிக்க இந்து மதத்தில் செறிந்து நிறைந்து காணப்படுகின்றனர்.

சில மாதிரி வடிவங்களை மட்டுமே இந்துமத புராண இதிகாசங்கள் சார்ந்து தொகுக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தையும், பின்நவீனத்துவ அழுகல்களையும் புரிந்துகொள்ள இந்த வக்கிரங்களே எமக்கு போதுமானவை.

தீபாவளியாக கொண்டாடும் நரகாசுரனை இந்துமதம் எப்படி வக்கிரத்து உருவாக்கியது எனப் பார்ப்போம். பூமியைப் பாயாக சுருட்டி கடலுக்குள் அசுரன் ஒருவன் ஒளித்து விட, விஷ்ணு மூன்றாவது அவதாரமாக பன்றி அவதாரம் எடுத்து மீட்டு வந்து, பூமாதேவியை விபச்சாரத்தளத்தில் புணர்ந்து நரகாசுரனை பெற்றதாக இந்துமதம் கூறுகின்றது.

இந்த பிறப்பு எப்படிப்பட்டது. இன்றைய நவீன கொலிவூட் சினிமா பொலிஸ் படங்கள் போல், மீட்பவர்கள் அப்பெண்ணை புணர்வது என்ற வடிவில் பூமியை புணர்வதாக கதை உள்ளது.

ஆணாதிக்க கண்ணோட்டம், மீட்கப்படுவது எப்போதும் பெண் மீட்பவர் எப்போது ஆண், மீட்ட பின் எப்போதும் புணர்வது என்று உலகப் பண்பாடு ஓரே பொதுக் கண்ணோட்த்தில் காணப்படுகின்றது. இது இயற்கை பற்றிய ஆணாதிக்க இந்துமதக் கண்ணோட்டத்திலும் பிரதிபலிக்கின்றது.

விஷ்ணுவின் கற்பழிப்பு கதையைப் பார்ப்போம். பத்மபுராணம் உத்தர காண்டம் 263 இல் ஞானி ஜலந்தரின் மனைவி விராந்தா மீது ஆசைப்பட்ட விஷ்ணு கற்றை சூறையாட தீர்மானித்தார். அதன்படி அவளை ஏமாற்றி கற்பழித்தார்.

இதையடுத்து விராதா கோபத்துடன் சபிததைப் பார்ப்போம்;. " ஓ விஷ்ணு! பிறர் மனைவியின் கற்பைக் குலைப்பது உனக்கு வெட்கமில்லையா? ஞானிபோல் தோற்றமளிக்கிறாய்; தூ, கடைகெட்ட குற்றவாளி"148 என்று சபித்தாள்.

கடவுள்களின் கற்பழிப்பை இந்து மதம் நியாயப்படுத்தும் போது, பெண்கள் எப்படி இந்து ராஐசியத்தில் கற்புரிமையை பாதுகாக்கமுடியும். இந்து மதம் ஆணாதிக்க மதம் அல்லவா? -

ஆக்கம் :‍ kirubans
தள‌ம்: http://www.yarl.com/forum/index.php?showtopic=5318&st=60 யில் ஒரு பகுதி.

2.  இந்த காட்சி நிகழும் இடம் இன்றைய பஞ்சாப் மாநிலத்தில் Jalandhar, Punjab ஜலந்தர் ஓர் இடம் கதையைப் படிக்கும் போதே அந்த ஊரின் பெயர்க்காரணம் உங்களுக்கு விளங்கும்.

அந்த ஊரில் ஜலந்தர்-பிருந்தா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். நல்ல கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இவர்களுடையே ஒரேயொரு விஷயத்தில் மட்டும் கருத்து வேறுபாடு என்ன விஷயத்தில் என்றால் கடவுள் விஷயத்தில்.

அப்படி என்ன கருத்து வேறுபாடு? பிருந்தா விஷ்ணுவை தவிர வேறு கடவுளே இல்லை என்னும் அளவுக்கு விஷ்ணு பக்தை. அவளது ஆம்படையான் ஜலந்தருக்கோ சிவன் மீது அபார நாட்டம்.

இந்த விசித்திரமான விஷயத்தை கேள்விப்பட்ட நாரதர், அந்த குடும்பத்தில் சிறிது விளையாடிப் பார்க்க நினைத்தார். ஒருநாள் ஜலந்தர் தனியாக இருக்கும் போது அவனை சந்தித்தார்.

என்ன ஜலந்தர்?... நீயோ சிவனை வழிபாடு செய்கிறாய். உன் மனைவியோ விஷ்ணுவை வழிபடுகிறாள். நீ பின்பற்றும் சிவபக்தியால் சிவனுடைய மனைவி பார்வதி தேவியையே நீ அடையலாமே... எதற்கு இந்த பிருந்தாவுடன் போராடிக் கொண்டிருக்கிறாய். இந்த பிருந்தாவை விட அந்த பார்வதி எவ்வளவு அழகு தெரியுமோ?... என ஜலந்தரின் மனதில் பற்றவைத்து விடுகிறார் நாரதர்.

உடனே ஜலந்தரும்... ‘நான் பார்வதி தேவியை அடைய முடியுமா?’...எப்படி? என கேட்கிறான். அதற்கு நாரதரே யோசனையும் கொடுக்கிறார். “சிவனுக்கு சாமவேதம் என்றால் உயிர். எங்கே சாமவேதம் ஒலித்தாலும் மயங்கி அந்தப் பக்கம் போய்விடுவார். நீ என்ன பண்ணு... சாமவேதம் பாராயணம் செய்பவர்களை பிடித்து நல்ல சத்தமாக சாமவேதம் ஒலிக்கச் செய்.

அதனைக் கேட்டு சிவபெருமான் மயங்கியிருக்கும் வேளையில் கைலாயத்துக்கு சென்று காரியத்தை முடித்துவிடு ” சிந்திக்கத் தெரியாத ஜடமாகிவிட்ட ஜலந்தரும் நாரதரின் கலக யோசனையை காது கொடுத்து கேட்ட பின், அப்படியே... சாமகானம் பாட ஏற்பாடு பண்ணினான்.

இதைக் கேட்டு சிவன் லயித்திருக்க... அவர் இல்லாத நேரமாய்ப் பார்த்து கைலாயத்துக்குள் காலடி எடுத்து வைத்தான். அங்கே பார்வதி தேவி தனிமை அழகில் தத்தளித்துக் கொண்டிருக்க, நாரதர் கொடுத்த யோசனைப்படி பார்வதியை போய் கட்டிப்பிடித்து விட்டான் ஜலந்தர்,

பார்வதி... தன் மேல் சிவன் அல்லாத ஒருவன் சில்மிஷம் செய்கிறான் என்பதை அறிந்து ‘ஸ்வாமீ’ என ஏழுகடல் கொந்தளிக்க கத்துகிறாள். கைலாயத்தில் இப்படி...

ஜலந்தரின் வீட்டுத்தோட்டத்தில்?... கணவனைக் காணாது மனைவி பிருந்தா தனித்துத் தவித்திருக்கிறாள். தனது பரம தெய்வமான விஷ்ணுவிடம் தன் கணவன் எங்கே என வேண்டுகிறாள்.

இதைப் பார்த்த விஷ்ணு... ‘நமது பக்தைக்கு நாம் ஏன் சந்தோஷம் தரக்கூடாது? தன் கணவனை காணோமே என பாவம் தேடிக்கொண்டிருக்கிறாள். நாமே ஜலந்தராக உருவெடுத்து அவளை மகிழ்ச்சிப்படுத்துவோம் என முடிவெடுத்து... கணவன் ஜலந்தர் போலவே உருவம் எடுத்து பிருந்தாவை நெருங்கினார் விஷ்ணு.

‘ஆஹா... என் கணவர் வந்துவிட்டார்’ என சந்தோஷம் பொங்கிய பிருந்தா... தன் கணவர் ரூபத்தில் வந்திருந்த விஷ்ணுவை கட்டிப்பிடித்துக் கொண்டாடினாள் இருவரும் தோட்டத்தில் ரொம்ப இஷ்டமாக இழைந்து கொண்டிருக்கும் நேரத்தில்...‘நெருக்கமாக இருக்கும் அவர்களுக்கு நெருக்கமாக வந்து பொத்’தென வந்து விழுந்தது ஒரு தலை. ரத்தம் கொட்ட கழுத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட அந்தத்தலை, ஜலந்தரின் தலை.

ஆமாம்... சாமவேதத்தில் சிவனை மயக்கிய ஜலந்தர்... பார்வதியை கட்டிப் பிடிக்க இதனால் பார்வதி ஏழுகடல் அதிர சத்தம் போட்டாள் இல்லையா?

வேதத்தின் மயக்கத்தை... பார்வதியின் கூக்குரல் கலைக்க, ஓடிப்போய் பார்த்தார் சிவன். தன் மனைவியை இன்னொருவன் பலாத்காரப்படுத்துவதா?... என ஜலந்தரின் தலையை சீவியெறிந்தார்.

அந்த ஜலந்தரின் தலைதான்... பிருந்தாவும் ஜலந்தர் போல் ரூபம் எடுத்து வந்த விஷ்ணுவும் இழைந்து கொண்டிருந்தபோது இடையில் வந்து விழுந்தது.

பார்த்தாள் பிருந்தா... உடலோடு விழுந்தவன் கணவனா? இல்லை தலைமட்டும் விழுந்தவன் கணவனா? சந்தேகம் அதிகரிக்க...அப்போது திடுக்கென உடலோடு கூடிய ஜலந்தர் மறைந்து விஷ்ணுவாகிறார். ‘நான்தான் பக்தையே...’ என அறிமுகம் கொடுக்கிறார்.

இதைக்கேட்டு பொங்கியெழுந்த பிருந்தா...’அடப்பாவி... பக்தையை இப்படி பண்ணிவிட்டாயே? என் கணவன் ரூபத்தில் வர நீ யார்? தவறு செய்துவிட்டாய். பகவானாக இருந்தாலும் தவறு தவறுதான். உனக்கு சாபமிடுகிறேன்.

கடவுளாக இருந்தாலும் நீ கல்லாய் போவாயாக’ பிருந்தாவின் சாபம்தான் பகவானை சாலக்ராமம் என்ற சிலையாக்கிவிட்டது என்பது புராணம்.
ஆக்கம் சுட்டி : http://thathachariyar.blogspot.com/2011/01/100-2.html


3 ராமாயணக் கதைக்கு ஒரு ஆதாரக்கதை அவசியக்கதை அதன் பூர்வோத்திரக்கதை என்பது ஒன்று வால்மீகியாலேயே சொல்லப்பட்டிருக்கிறது.

அது என்னவென்றால் விஷ்ணு ராமனாய் பிறக்க வேண்டிய காரணம் என்ன? லக்ஷ்மி சீதையாய் பிறக்க வேண்டிய காரணம் என்ன? சீதை என்னும் லக்ஷ்மியை மற்றொருவன் தூக்கிக் கொண்டுபோகவேண்டிய காரணம் என்ன? என்பவைகளுக்கு எல்லாம் அதில் நியாயம் சொல்லப்பட்டிருக்கிறது.

அதென்னவென்றால் விஷ்ணுவானவன் ஜலந்தராசூரன் என்கின்ற ஒரு ராக்கதனுடைய மனைவி பிருந்தையைத் திருட்டுத் தனமாக மாறு வேஷம் பூண்டு புணர்ந்துவிட்டான்.

எப்படியென்றால் ஜலந்தராசுரன் மனைவி மகா பதிவிரதையாம். அவள் புருஷனை சிவன் கொன்று விட்டானாம். (மகாபதிவிரதையின் புருஷனை சிவன் எப்படி கொன்றானோ கொலை பாதகன் அதிருக்கட்டும்) இந்த சங்கதி அவளுக்குத் தெரியாதாம். (ஏனென்றால் அவள் பதி விரதையல்லவா? எப்படித் தெரியும் பாவம்)

அப்படி இறந்துவிட்ட சமயத்தில் விஷ்ணுவானவன் அந்த ஜலந்தராசுரன் போல் உருமாறி அந்தம்மாளைப் புணர்ந்து கொண்டிருந்ததாகவும் விஷ்ணுவின் புணர்ச்சி வேறுபட்டிருந்ததிலிருந்து அந்தம்மாள் இந்த உருமாறின விஷ்ணு தன் புருஷனல்ல என்பதாகத் தெரிந்து விஷ்ணுவுக்குச் சாபம் கொடுத்ததாகவும்,

அந்தச் சாபத்தில் "நீ என்னை கற்பை அழித்தது போல் உன் பெண்ஜாதியினுடைய கற்பை ஒரு அசுரன் அழிக்கவேண்டும்" என்றும் சபித்ததாகவும் அந்தச் சாபம் நிறைவேறவே மகாவிஷ்ணுவும் அவன் மனைவி மகாலக்ஷ்மியும் முறையே ராமனாகவும், சீதையாகவும் வந்ததாகவும் அந்த சாபம் நிறைவேறவே ராவணன் என்கின்ற அசுரன் தோன்றிச் சீதையைத் தூக்கிக்கொண்டு போனதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகவே, பதிவிரதையான பிருந்தையின் சாபம் நிறைவேறுவதற்கு ஆகவே இவ்வளவு காரியமும் ஏற்பட்டிருக்கும் போது அந்த கற்பு கெடுவது என்கின்ற பாகம் மாத்திரம் நிறைவேறப்படாமல் எப்படி பாக்கியிருக்க முடியும்? என்பது ஒரு சாதாரண கேள்வியாக ஆகிவிடமுடியுமா என்பது யோசிக்கத்தக்கதாகும்.

விஷ்ணுவானவன் ஜலந்தராசுரன் மனைவியின் கற்பைக் கெடுக்காமல் இருந்திருந்தால்தான் சீதையின் கற்பு கெடாமல் இருந்திருக்க முடியுமே ஒழிய, ஜலந்தராசுரன் மனைவியின் கற்பு கெடப்பட்ட பிறகு சீதையின் கற்பு மாத்திரம் கெடாமல் இருந்திருக்கும் என்றால் ராமாயணக் கதையாவது பொய்யாயிருந்திருக்க வேண்டும் அல்லது அதற்கு ஆதாரமான முன் கதையாவது பொய்யாயிருந்திருக்க வேண்டும்.

ஆகவே விஷ்ணு ஜலந்தராசுரன் மனைவியை என்ன என்ன செய்தானோ அதையெல்லாம் ராவணேசுரன் என்பவன் சீதையை செய்துதான் இருக்கவேண்டும் என்பது மாத்திரமல்லாமல் கதைப்படி பார்த்தால் செய்து தான் தீரவேண்டும் என்றே சொல்லுவேன்.

ஏனெனில் ஒரு அசுரன் என்பவன் மனைவியை ஒரு ஆரியன் என்பவன் இப்படி அனுபவித்தான் அப்படி அனுபவித்தான் என்று ஆனந்தமாகப் பச்சையாக எழுதிவிட்டு ஆரியன் என்பவன் மனைவியை அசுரன் என்பவன் அனுபவித்தான் என்கின்ற விஷயத்தில் மாத்திரம் ஜாதி அபிமானம் காரணமாக ஜாடை மாடையாய் எழுதியிருந்தாலும் விவகாரத்துக்கு வரும்போது தாக்ஷண்யமில்லாமல் பார்க்கும் போது உண்மை வெளியாகித்தானே தீரவேண்டும்.

ஆக்கம் ‍ : குடி அரசு கட்டுரை 08.03.1936.  
தள‌ம்: http://www.periyardk.org/PHP/Details.php?key1=Kudiyarasu&key2=1936&fileName=Mar&cCount=5இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 2.

இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 3.

Tuesday, November 29, 2011

ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?

ராமனின் தந்தை தசரதன் நடத்திய அசுவமேத யாகம்.

அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன்.

இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.

***********
வேதத்தில் யாகங்கள் முக்கியமானவை.


இந்த யாகங்களை பிராமணர்கள் பண்ணி வைக்கவேண்டும். பிராமணர்கள் Manthra labours. அதாவது மந்திரத் தொழிலாளர்கள்.

வேதத்தில் 6 அங்கங்கள் இருக்கின்றன.

வேத சொற்களின் உச்சரிப்பைப்பற்றி சொல்லும் சிக்ஷா என்பது முதல் அங்கம். மொழியியலைப் பற்றி சொல்வது வ்யாகரண அங்கம்.

யாப்பு இலக்கணம்பற்றி கூறுகிறது சந்தஸு அங்கம். சொற்பிறப்பு பற்றி சொல்வது நிருப்தம். ஜோதிஷம் பற்றி சொல்லாது ஜோதிஷ அங்கம்.

வேதத்தில் கூறப்பட்ட யாகங்களை எப்படி எப்படி செய்யவேண்டும் என்று சொல்வது கல்பம் என்னும் அங்கம்.

இப்படியாக யாகங்களை அனல் முன் நின்று மந்த்ரங்களை ஓதி சும்மாவா சொல்லிக் கொடுப்பார்கள்.

அதற்கு Charge வேண்டாமா? Fees வேண்டாமா?
சம்பளம் கொடுக்கவேண்டும் அல்லவா?

இதற்குப் பெயர்தான் தட்சணை. அதாவது யாகங்களுக்கு கொடுக்கவேண்டிய சம்பளம்தான் தட்சணை!

அசுவமேத யாகம் பற்றி இக்கட்டுரைத் தொடரின் முற்பகுதியில் நான் சொல்லியிருந்தேன்.

அதில் மன்னர்களுக்காக அஸ்வமேத யாகம் நடத்திவிட்டு...
அதன் பின்னர் மன்னர் வீட்டுப் பெண்களான ராணிகளையும், ராஜகுமாரிகளையும் தங்களோடு அழைத்துச் சென்று விடுவார்கள்.
ராஜ பெண்களோடு ராஜ சுகம் அனுபவித்து விட்டு திரும்ப
அரண்மனைக்கு அனுப்புவார்கள் யாகம் நடத்துபவர்கள்.

***********

இதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.
Kausalya with three strokes slew that horse experiencing great glee.
Kausalya with an undisturbed heart passed one night with that horse.
The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.

இதன் பொருள் வருமாறு:
தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள்
கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள்.

ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் (தசரதனின் மனைவிகளை) புணர்ந்தார்கள்.

இதன் காரணமாக
தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள்
என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.

ஆனால்
வால்மீகி இராமாயணத்தைத்
தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்?

யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார்.

ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை? - - பா.வே. மாணிக்கவேலர் .
SOURCE: விடுதலை
*********

மேலும் சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
படித்துவிட்டு விடை சொல்லுங்கள்.***********************

Monday, September 12, 2011

இந்து மதத்தைவிட்டு நீங்க வேண்டும்?. பன்றியை விட‌ கேவ‌ல‌மா?

அனைவரும் வெட்கித் தலைகுனியவேண்டிய விஷயமல்லவா இது...?

பெரம்பலூரில் பொதுச் சாலையில் தாழ்த்தப்பட்டோர் சைக்கிள் ஓட்டத்தடை. 6 . 9. 2011.

“இந்து மதத்தின் பெயரை சொல்லிக் கொள்வது வெட்கக் கேடானது. - பெரியார்.

“இந்து மதம் வேண்டுமா? இந்து மதத்தைவிட்டு நீங்கியாக வேண்டும். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதோடு அதற்கு ஆதாரமும் இல்லை.

இந்து மதம் என்பதும், தீண்டாமை என்பதும் ஒரே பொருளை உடையதாகுமே தவிர இரண்டும் வேறு வேறு அல்ல என்பதை நம் மக்கள் உணர வேண்டுகிறேன்.”

‘இந்து மதத்தை விட்டு விட்டால் எங்களை என்ன மதம் என்று சொல்லிக் கொள்வது?’ என்று கேட்கலாம்.

உங்களுக்குத் துணிவு இருந்து நீங்கள் வேறு எந்த மதத்தின் பேரை சொல்லிக் கொண்டால் சமுதாயத்தில் உங்களைத் தீண்டாமையும், இழிவும் அணுகாதோ அதைச் சொல்லுங்கள்.” – -
பெரியார்.

பெரம்பலூரில் பொதுச் சாலையில் தாழ்த்தப்பட்டோர் சைக்கிள் ஓட்டத்தடை. 6. 9. 2011.


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மருவத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேரளி கிராமத்தில் பறையர் சமூகத்தை சார்ந்த சுமார் 150 குடும்பங்களும், அருந்ததியர் சமூகத்தை சார்ந்த சுமார் 75 குடும்பங்களும் வசித்து வருகின்றாhர்கள்.

தலித் சமூகத்தை சார்ந்த மக்கள், நாடு சுதத்திரம் அடைந்து இது நாள் வரை மேல் ஜாதியினர் பகுதியில் உள்ள பொது சாலையில் சைக்கிள் ஓட்ட அனுமதிக்கபடவில்லை.

அனுப்புநர்
இரா. இலட்சுமணன்,
மாவட்ட அமைப்பாளர்,
பெரியார் திராவிடர் கழகம்,
பெரம்பலூர் மாவட்டம்.
செல் : 9994595714.


பெறுநர்
உயர்திரு டாக்டர் தாரேஸ் அகமது அவர்கள்,
மாவட்ட ஆட்சித் தலைவர்,
பெரம்பலூர் மாவட்டம்.


பொருள் : தேனீர்கடையில் இரட்டை டம்ளரை அகற்ற கேரியும்
பொது சாலையில் தலித் மக்கள் சைக்கிள் ஓட்ட அனுமதி
வேண்டியும் விண்ணப்பம்.

—-
ஐயா,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மருவத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேரளி கிராமத்தில் பறையர் சமூகத்தை சார்ந்த சுமார் 150 குடும்பங்களும், அருந்ததியர் சமூகத்தை சார்ந்த சுமார் 75 குடும்பங்களும் வசித்து வருகின்றாhர்கள்.

தலித் சமூகத்தை சார்ந்த மக்கள், நாடு சுதத்திரம் அடைந்து இது நாள் வரை மேல் ஜாதியினர் பகுதியில் உள்ள பொது சாலையில் சைக்கிள் ஓட்ட அனுமதிக்கபடவில்லை.
மேலும் அந்த பொது சாலையில் சைக்கிள் ஓட்ட முயன்ற தலித் இனத்தை சார்ந்தவர்களை அவர்கள் தாக்கி அடித்து திட்டி உதைத்துள்ளனர்.

உதாரணமாக மணியரசன் (டிரைவர்) த/பெ. மணிவேல் என்பவர் டீசல் கேனை ஏற்றிக்கொண்டு பைக்கில் செல்லும் போது அன்பழகன் உடையார் என்பவர்

‘நீ எப்படி எங்கள் வீதியில் பைக்கில் செல்லலாம்’ நீ கீழே இறங்கி வண்டியை தள்ளிக் கொண்டுதான் போகவேண்டும் என கூறிவிட்டு
எனது முதலாலியிடம் ‘இவன் எப்படி நமது வீதியில் பைக்கில் ஏரிகொண்டு வரலாம், இதை அவனிடம் சொல்லி வை’ என கூறி தடுத்தார்.

மேலும் எங்கள் பகுதியை சார்ந்த அய்யாக்கண்ணு என்பவர் மகள் சுகுனா 12-ம் வகுப்பு படிக்கின்றார். அவர் வகுப்பு தோழியான உiடாயர் சமூகத்தை சார்ந்த வீரமனி தனது சைக்கிளில் சுகுனாவை பின் சீட்டில் உட்கார வைத்து அழைத்து வந்ததை பார்த்த உடையார் சமூகத்தவர்கள் பறச்சியை ஏன் சைக்கிளில் உட்கார வைத்து அழைத்து வருகின்றாய் என கூறி உள்ளனர்.

மேலும் ரஞ்சித், ரவி என்ற இரு 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு குருப்பிட்ட தெருவில் சைக்கிளில் வந்த போது உருலாஸ் என்பவர் வீட்டில் இருந்தவர்கள் இந்த வீதியில் நீங்கள் எல்லாம் சைக்கிளை தள்ளிக்கொண்டுதான் போக வேண்டும் என்று கூறி உள்ளார்.

துபாய் பெரியசாமி என்பவர் 25 நாட்களுக்கு முன்பு உடையார் தெருவில் பைக்கில் சென்றதை பார்த்த தவிட்டுகாரம்மா என்பவர் நீ என்ன சாதி சனம் உனக்கு உடம்புல தெம்பு இருக்கா என்று கேட்ட போது பதிலுக்கு துபாய் பெரியசாமி (தலித்) இன்னும் ஊர் திருந்தளையாடா என்று கேட்டுள்ளார்.

மேலும் தலித் பள்ளி மாணவர்கள் சைக்கிலில் செல்வதற்கு பாதுகாப்பான சாலை வசதி இருந்தும் உயர் சாதியினர் அச்சாலையில் சைக்கிலில், பயனிக்க அனுமதி மருப்பதால் ஊரை சுற்றி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர்.

இதனால் விபத்து ஏற்பட்டு விடுமோ என்று பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். பல மாணவர்கள் சைக்கிளை பயன்படுத்தாமல் நடந்தே செல்கின்றனர்.

மேலும் விவசாயத்திற்கு தேவையான உரம் பூச்சி மருத்துகளை ஊருக்கு நடுவில் உள்ளதால் தலித்துகள் தங்கள் நிலத்திற்கு உரத்தை வாங்கி கொண்டு தலையில் தூக்கி கொண்டோ, வண்டியை தள்ளிக்கொண்டோ, தான் செல்கின்றனர்.

மேலும் அஞ்சலகம் ஊருக்குள் இருப்பதால் அஞ்சலகம் வரும் தலித்துக்கள், மத்திய அரசு ஊழியர் தபால்காரர் இன்று வரை தபால் பட்டுவாடா செய்ய சைக்கிலை பயன்படுத்தியது இல்லை.

மேலும் நாள் 02.10.07ம் ஆண்டு மருவத்தூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பேரளியில் 1. சிங்காரவேல் 2. அய்யாசாமி, 3. சின்னதுரை 4. முத்துசாமி ஆகியவரது டீக்கடையில் இரட்டை டம்ளர் இருப்பதாகவும் இதனை அகற்றுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு செய்திருந்தேன்.

எனது மனுவிற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி 16.04.2008 அன்று எனக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளீர்கள். அதில் டீக் கடையில் காவல்துறையினர் ரகசிய முறையில் விசாரணை செய்ததாகவும்

விசாரணையில் இரட்டை டம்ளர் முறை கடைபிடிக்கபடவில்லை என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கடிதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை எனக்கு தெரிவிப்பதாக தெரிவித்திருந்தீர்கள்.

எனது வாதம் யாதெனில் நீங்கள் அப்போது விசாரித்தபோது இல்லை எனில் 04.09.2011. அன்று தி. இந்து ஆங்கிலப் பத்திரிக்கையில் இரட்டை டம்ளர் முறை பேரளியில் உள்ளதாகவும் மேலும் பல தீண்டாமை நிலை உள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளதே?.

ஆகவே இனிவரும் காலங்களிலாவது திறந்த மனதோடு, நடுநிலையோடு, ஒட்டு மொத்த மனித குலுத்துக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படாத வண்ணம் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர
ஒருவார காலத்திற்குள் பேரளியில் உள்ள அனைத்து பொது சாலையிலும் தலித் மாணவர்கள், பொது மக்கள் சைக்கிளில் இனி எப்போதும் சென்று வரலாம் என்று உத்தரவிடுவதோடு

சாதி பாதுபாடு பார்த்து தலித் மக்களை அச்சுருத்துபவர்கள் மீதும் தாக்குகிறவர்கள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
. மேலும் பேரளி ஊராட்சி மன்ற தலைவரை தேர்தெடுப்பதில்

ஏழமுறையில். அதிக பணம் கட்டுகின்றார்களோ அவர்கள் தான் தலைவராக அறிவிக்கப்படுகின்றார்கள்.


இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய தலித் மக்களின் பங்களிப்பு எதுவும் இன்றி. அடிப்படை வசதிகள் செய்து தருமாறு தற்போதைய தலைவரிடம் கேட்டால் நீ ஓட்டு போட்ட நான் ஜெயித்தேன் செய்து தரமுடியாது என்று கூறுகின்றார்.

மேலும் தி.இந்து பத்திரிக்கையில் பஞ்சாயத்து தலைவர் படைகாத்து அளித்துள்ள பேட்டியில் சிரிய வகையிலான ஒன்றிரண்டு தீண்டாமை,சம்பவங்கள் நடந்திருக்கலாம் என்று ஒப்பு கொண்டுள்ளார்.

மேலுத் தலித் மக்களை கோவில்களுக்குள் அனுமதிக்காதது பற்றி செய்தியாளர் கேட்டதற்கு இருதரபினரும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அவரவர் கோயில்களில் அவரவர் சாமி கும்பிட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது என்று ஒப்பு கொள்கின்றார்.

தலைவர் கொடுத்திருக்கும் பேட்டியின் அடிப்படையில் தீண்டாமை பேரளியில் நடந்தேரி வருகின்றது என்பது உண்மை.

தீண்டாமை நடப்பதை அறிந்த பிறகு சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டிய தலைவர் தீண்டாமை நடப்பதற்கு பல சம்பவங்களில் இவரே காரணமானவராக உள்ளார்.

மேலும் மகேந்திரன் என்ற இளைஞர் இன்று நான் மனுவில் குறிப்பிட்டதை போல் கடந்த 5 மாதத்திற்கு முன்பு பேரளியில் நடக்கும் தீண்டாமை குறித்து மனுநீதி நாளில் வரிசையில் நின்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் முன்பு மகேந்திரனிடம் இருந்த மனுவை தலைவர் படைகாத்து பிடிங்கி கொண்டு சென்று விட்டார்.

சிறிய வகையான தீண்டாமையும் நிகழக் கூடாது என்று தான் சட்டம் சொல்கிறது. அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இப்படிக்கு,
இரா. இலட்சுமணன்,
06/09/2011


SOURCE:பெரம்பலூரில் பொதுச் சாலையில் தாழ்த்தப்பட்டோர் சைக்கிள் ஓட்டத்தடை
------------------------------

20, 21ஆம் நூற்றாண்டில்தான் பலவிதமான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உலகுக்குக் கிடைத்தன. இதன் வாயிலாக மின்சாரம் முதல் கம்ப்யூட்டர் வரை கண்டுபிடிக்கப்பட்டு இன்று நமக்கு அது தவிர்க்க இயலாததாகிவிட்டது.

தொலைதொடர்பு, போக்குவரத்து போன்றவற்றின் மூலம் இன்று உலகம் விரல் நுனியில் சுருங்கிவிட்டது. எந்தத் தொலைவிலுள்ள மனிதனும் உலகின் மற்றொரு மூலையிலுள்ள மனிதனை தொடர்புகொண்டு மருத்துவம், வியாபாரம், கல்வி உட்பட அனைத்துத் துறைகளிலும் பயனடைய முடிகிறது.

அதேநேரத்தில், இன்றுவரை நமது இந்தியத் திருநாட்டில் பல கிராமங்களிலும் ஒரு சாரார் மட்டும் ஏனோ மற்றவர்களிடமிருந்து தனித்து விடப் பட்டுள்ளனர்.

அவர்கள்தான் இந்து மதத்தினரால் தாழ்ந்த ஜாதியினர் என்று அழைக்கப்படும் தலித்துகள்.

தலித்துகள் இந்தியாவையே ஆளத் தகுதிபெறும் அளவுக்கு பெரும்பான்மையினர்.

ஆனால் அவர்களின் நிலையோ மிகவும் பரிதாபத்திற்குரியது. எப்படியெனில், இன்று அவர்கள் சில இடங்களில் வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளை விட கீழ்த்தரமாக நடத்தப்படுகின்றார்கள்.

மேல்சாதியினர் வசிக்கும் இடங்கள் வழியாக தலித்கள் செல்லும்போது செருப்பைக் கையில் தூக்கிக்கொண்டுதான் செல்லவேண்டும். சில இடங்களில் செல்லவே முடியாது.

தாழ்த்தப்பட்ட ஒருவன் இறந்துவிட்டால் அவனது பிணத்தை எரிக்கவோ அல்லது புதைக்கவோ இந்த மேல்சாதி மக்கள் வசிக்கும் பகுதிகள் வழியாக கொண்டுசெல்லவே முடியாது. பல மைல் தூரங்கள் தேவையில்லாமல் சுற்றிச் சென்றுதான் கொண்டு செல்லவேண்டும்.

ஐந்தறிவு கொண்ட நாய் ஒன்று மேல்சாதிக்காரனின் வீட்டில் நுழையலாம்... அங்குள்ள பாத்திரத்தில் வாய் வைக்கலாம்... அவர்களின் தெரு வழியாக இஷ்டத்துக்கு வலம் வரலாம்... ஆனால், இதே காரியங்களை இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒருவன் செய்தால் இவர்களின் வீடும், பாத்திரமும் உடலும் தீட்டுப்பட்டுவிடும்...! அந்தோ பரிதாபம்...!!!

மேல்சாதியினர் என்று கூறிக்கொள்வோரின் வீட்டுப் பெண்ணையோ அல்லது ஆணையோ இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒரு ஆணோ, பெண்ணோ நேசித்துவிட்டாலே போதும்... அவர்களுக்கு மொட்டை அடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, சக மனிதர்கள் முன் கேவலப்படுத்தப்படுவார்கள். ஏன்...? அவர்களுடைய உயிர் கூட பறிக்கப்பட்டுவிடும்.


இது நமது இந்தியாவில் இன்றும் சர்வ சாதாரணமாக நடந்து வருபவை. அது மட்டுமல்ல!

தாழ்த்தப்பட்ட இந்துப் பெண் ஒருத்தி மேல்சாதிக்காரனால் மானபங்கப் படுத்தப்பட்டாலோ, கொல்லப்பட்டாலோ அதற்கு சாட்சியே இல்லாமல் ஆக்கி, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடுகின்றனர். பரிதாபம்... பரிதாபம்...

கல்வி கற்பி! ஒன்று சேர்!! புரட்சி செய்!!! என்றார் அண்ணல் அம்பேத்கர். ஆனால் இந்த மக்கள் மற்றவர்களைப் போல கல்வி கற்க இயலவில்லை. காரணம் பொருளாதாரம்.

தலைமுறை தலைமுறையாக ஆளும் வர்க்கத்திற்கு கூலி வேலை செய்வதும், கிடைப்பதை வைத்துக்கொண்டு சடங்கு, சம்பிரதாயங்கள் என்று செலவழித்துவிட்டு கடனாளியாகி, மீண்டும் அவர்களிடமே கையேந்திக் கொண்டு நிற்பதும்தான்!

பல்லாண்டு காலங்களாக பல தலைவர்களும் முயற்சி செய்தபோதிலும் இந்தக் கொடுமைகளுக்கு இன்றும் தீர்வு இல்லை.

இது எந்த அளவுக்குச் சென்றுள்ளது என்றால், மனிதனின் மலத்தை மனிதனையே தின்ன வைத்துள்ள அநியாயம்... அக்கிரமம்... இன்று இவர்களால் தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு ஏற்பட்டுள்ளது.

அனைவரும் வெட்கித் தலைகுனியவேண்டிய விஷயமல்லவா இது...?


மேலவலவு, கொடியங்குளம், வாசாத்தி போன்ற கிராமங்களின் வரிசையில் இன்னும் எத்தனை எத்தனை கிராமங்களோ...!

ஜாதிகள் இல்லையடி பாப்பா...' இது பிஞ்சுக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்படும் பாட்டு.

ஆனால், இதைக் கற்பதற்கு பள்ளியில் சேர வேண்டுமானால் தனது ஜாதியைச் சொல்லித்தான் சேர வேண்டியதிருக்கிறது.

முன்னேறுவதற்கு முயலும் இந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு அதில் கிடைத்த பலன் பூஜ்யமே!

பல தலைவர்கள் வந்தார்கள்... சென்றார்கள்... அவர்களால் தங்கள் சமுதாயத்திற்காகக் குரல் கொடுக்கவும், சில சலுகைகளைப் பெற்றுத்தரவும் முடிந்ததே தவிர,

அம்மக்கள் சக மனிதர்களுடன் சரி சமமாகப் பழகும் உரிமையை, தலைமைத்துவத்தை வாங்கிக் கொடுக்க முடியவில்லை, கொடுக்கவும் முடியாது. அரசாங்கமும் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவை அனைத்துமே வீணாகியதுதான் மிச்சம்.

ஏனென்றால், இது நாட்டின் கொள்கை அல்ல!

அவர்கள் சார்ந்துள்ள மதத்தின் கொள்கை.


அன்றாட காரியங்கள் முதல் அவ்வப்போது நடக்கும் மதச் சடங்குகள், நல்ல நிகழ்ச்சிகள் அனைத்திலும் தலித்துகள் ஜாதியின் பெயரால் ஒதுக்கப்பட்டனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், எது எதுவெல்லாம் மனித சமுதாயத்திற்கு தீங்கு தருமோ, பாவமான காரியமோ, அந்த அனைத்திலும் ஜாதி வேறுபாடுகள் எங்கோ பறந்துவிட்டன.

உதாரணமாக,

தியேட்டரில் சினிமா பார்க்கும் ஒரு மேல்சாதிக்காரன் தன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவன் என்ன ஜாதி என்று பார்ப்பதில்லை.

மதுக்கடைகளில் மது அருந்துபவர்கள் ஜாதிப் பாகுபாடு இல்லாமல் கிண்ணங்களை மோதவிட்டு மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வதைப் பார்க்கிறோம்.

விபச்சாரம் செய்யும் ஆணும், பெண்ணும் தங்களுக்குள் என்ன ஜாதி என்று கேட்டுக்கொள்வதில்லை.

ஆனால் இதுவே நல்ல காரியங்களில் காணவே முடிவதில்லை. ஆகா... என்னே சமத்துவம்...!!!


=============

நீ இந்த‌ மாட்டை விட‌ கேவ‌ல‌மான‌வனா?

பசு மாட்டின் பின்புறம் மலம், மூத்திரம் வெளிவரும் உறுப்புகளுக்குக் கற்ப்பூர தீபாராதனை.

SOURCE: http://thathachariyar.blogspot.com/2011/02/blog-post_08.html
******


நீ இந்த‌ மைல் க‌ல்லை விட‌ கேவ‌ல‌மான‌வ‌னா?


SOURCE: http://thathachariyar.blogspot.com/2011/02/blog-post_08.html


நீ இந்த‌ ப‌ன்றியை விட‌ கேவ‌லமான‌வ‌னா?


மகாவிஷ்ணுவின் அவதாரமான வராகமூர்த்தி (பன்றி)க்கு பூஜை. வராக மூர்த்தியாகிய பன்றிக்குப் படையல் என்ற பெயரால் சோறும் பழமும் வைத்தால் சரிபட்டு வருமா?

அதற்கு வேண்டியதை வைத்துப் படையல் போட வேண்டியது தானே.

SOURCE: viduthalai/20080713/news

சாக்க‌டை ப‌ன்றியின் ஒவ்வொரு ப‌குதியையும் புனித‌ப்ப‌டுத்தும் இந்து மதம்
ம‌னித‌னை எவ்வாறெல்லாம் கேவ‌ல‌ப்ப‌டுத்துகிறது.

சுட்டியை சொடுக்கி ப‌டிக்க‌வும்.

>>>> பன்றி புனிதம். பன்றியின் ஆண் பெண் குறி “யாக மந்த்ரங்கள்” போன்றவையாம் . <<<
---------------

இந்து மதம் வேண்டுமா? இந்து மதத்தைவிட்டு நீங்கியாக வேண்டும்.

இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதோடு அதற்கு ஆதாரமும் இல்லை.

இந்து மதம் என்பதும், தீண்டாமை என்பதும் ஒரே பொருளை உடையதாகுமே தவிர இரண்டும் வேறு வேறு அல்ல என்பதை நம் மக்கள் உணர வேண்டுகிறேன்.

தீண்டாமை என்பதே ஜாதி காரணமாய் ஏற்பட்டதே தவிர அதற்கு வேறு காரணமோ, ஆதாரமோ இல்லை.தீண்டாமை என்பதே ஒரு ஜாதியானை மற்றொரு ஜாதியான் (மனிதனுக்கு மனிதன்) தொடக் கூடாது என்பதற்குத் தான் நாம் பயன்படுத்துகின்றோமே ஒழிய மற்றெதற்கு பிரஸ்தாபத் தீண்டாமையைப் பயன்படுத்துகிறோம்?

அதுவும் அப்படிப் பயன்படுத்துவதும் இந்துக்கள் என்னும் இந்து மதத்தாருக்குள் இருந்து தான் வருகிறதே ஒழிய யாருக்குள் இருந்து வருகிறது?

ஆகவே தீண்டாமை இந்துமதத்தின் காரணமாக இந்துக்கள் என்பவர்களுக்குள் மாத்திரம் ஜாதி காரணமாக மேல் ஜாதி என்பவர்களுக்கும், கீழ் சாதி என்பவர்களுக்கும் மாத்திரம் ஜாதி காரணமாக இருந்து வரும் காரியமே தவிர தீண்டாமை மதத்திற்கும் ஜாதிக்கும் அப்பாற்பட்டதல்ல என்பதை மக்கள் நல்ல வண்ணம் சிந்தித்துப்பார்த்தால் விளங்காமல் போகாது.

ஆகவே ஜாதியை வைத்துக் கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதும்,

இந்துமதத்தை வைத்துக் கொண்டு தீண்டாமை போக வேண்டும் என்பதும் மாபெரும் முட்டாள்தனமாகுமே தவிர சிறிதும் அறிவுடைமை ஆகாது என்பது என் கருத்து.

நம் வாழ்வில் ஜாதியும், மதமும் இன்று பார்ப்பானிடமும் கோவிலினிடமும் கடவுளினிடமும் தான் இருந்து வருவதை நல்ல வண்ணம் உணருகிறோம்.

அதாவது கடவுளால் தான் நாம் இந்துவாகிறோம். பார்ப்பானால் தான் சூத்திரனாகிறோம்.

நாம் ஒரு இந்து என்றால் நமக்கு நாம் கண்ணால் கூடப் பார்க்க முடியாத, காதால் கூடக் கேட்க முடியாத, 'வேதம்', 'சாஸ்திரம்' ஆகியவற்றையும்

நம்மை இழிமகனாக்கும். தருமங்களையும்,

பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் மனைவிகளாகிய சரஸ்வதி, இலட்சுமி, பார்வதிகளையும், மகன்களும் அவதாரங்களுமாகிய கந்தன், கணபதி, இராமன், கிருஷ்ணன்களையும், தேவர்களாகிய இந்திரன் முதலியவர்களையும், இவர்களது நடத்கைளையும்

இவற்றைக் குறிக்கும் புராணங்கள் இதிகாசங்கள் நெற்றிக்குறிகள் முதலியவற்றையும் நம்பியாக வேண்டும்.

இவ்வளவு தானா?

மற்றும் பாகவதம், விஷ்ணுபுராணம், பக்த விஜயம், பெரியபுராணம், ஆழ்வார்கள், நாயன்மார்கள் கதைகளையும் நம்பியாக வேண்டும்.

பிறகு மாரி, காளிகளையும் எல்லா கோயில், குளம், தீர்த்தங்களையும் நம்பியாக வேண்டியதோடு, மற்றும் ஜோசியம், ஜாதகம், கைரேகை, சாமத்திரிகாஷணம் நாள், காலம், நேரம், முகூர்த்தம், சகுனம், பல்லி விழுதல், பல்லி சொல்லுதல், பேய், பூதம், மந்திரம், சாந்தி கழித்தல், சூரியன் கதை, சந்திரன் கதை, கிரகணகதை முதலியவற்றையும் நம்ப வேண்டும்.


இவற்றில் எதை நம்பாவிட்டாலும் இந்துவாக மாட்டோமா?

இந்த நிலையில் உள்ள இந்துவும், சூத்திரனுமாகிய நாம் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொன்னால் அதில் புத்தியோ, சாத்திய அறிவோ இருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்?

ஆகவே மானமுள்ள அருமைத் தமிழ் மக்களே!

நமக்கு உண்மையில் தீண்டாமை என்னும் ஜாதிக் கேடும் - இழிவும் நீங்க வேண்டுமானால் இந்து மதத்தைவிட்டு நீங்கியாக வேண்டும்.

இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதோடு அதற்கு ஆதாரமும் இல்லை.


இந்து மதம் இந்துச் சட்டம் (இந்துலா) இந்து ஆட்சி (காங்கிரஸ் ஆட்சி) என்பவை எல்லாம் பார்ப்பன மதம், பார்ப்பனச் சட்டம், பார்ப்பன ஆட்சி ஆகுமே அல்லாமல் தமிழ்நாட்டில் தமிழனுக்கு என்று – சூத்திரன் தீண்டப்படாதவன் என்பதைத் தவிர வேறு எந்த உரிமையும் கிடையாது. மாற்றமடையவும் முடியாது.

ஆகவே தமிழன் தனக்கு இந்துமதம் வேண்டுமா? சூத்திரப்பட்டமும், தீண்டாமையும் ஒழியவேண்டுமா?

என்பதைப் பற்றி அறிவோடு மானத்தோடு நல்ல வண்ணம் சிந்தித்து முடிவெடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மானம் பெறுவதும், ஈனஜாதித் தனம் ஒழிவதும் அவசியம் என்றுபட்டால்:

முதலாவதாக நெற்றிக்குறியை ஒழித்துத் தள்ளுங்கள்.

இரண்டாவதாக கோவிலுக்குப் போவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

மூன்றாவதாக எந்தவித இந்துமதப் பண்டிகையையும் கொண்டாடாதீர்கள்.

பார்ப்பானைப் "பிராமணன்" என்று சொல்லாதீர்கள்.

SOURCE: (12-05-1969 'விடுதலை'யில் தந்தை பெரியார் தலையங்கம். பெரியார் களஞ்சியம். ஜாதி- தீண்டாமை பாகம்:12 என்ற நூலில் இருந்து…. பக்கம்:250

*****************
இந்து மதத்தை விட்டு விட்டால் எங்களை என்ன மதம் என்று சொல்லிக் கொள்வது?’

இந்து மதத்தின் பெயரை சொல்லிக் கொள்வது வெட்கக் கேடானது.

சமீபத்தில் தோழர் அம்பேத்கர் அவர்கள் சென்னை வந்திருந்த போது என்னிடத்தில் இது சம்பந்தமாக நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததிலிருந்தும் பஞ்சாப் லாகூரிலிருந்து ‘ஜாத்பாத் தோரக் மண்டல’தலைவர் சாந்தராம். அவர்களும்,

முன்பு காரியதரிசியாய் இருந்த ஹரிபவன் அவர்களும் உங்களைப் பற்றி எனக்கு எழுதிய சில கடிதங்களிலிருந்தும் உங்கள் காரியதரிசி எழுதின சில குறிப்புகளிலிருந்தும்

நீங்கள் நான் சொல்லும் இந்த வார்த்தைகளைப் பொறுமையாய்க் கேட்கக் கூடியவர்களென்றும் நடுநிலைமையிலிருந்து கவலையாய் சீர்திருத்தக் கூடியவர்கள் என்றும் தெரிந்ததினால் இவ்வளவு ஆயிரம் பேர் கொண்ட இந்த மாபெரும் கூட்டத்தில் இதை நான் சொல்லுகிறேன்.

எங்கள் நாட்டில் நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவனாய் இருந்த 1922-வது வருடத்திலேயே ஒரு பெரிய மாகாண காங்கிரஸ் மகாநாட்டில், ‘இராமாயணம் கொளுத்தப் பட்டாலொழிய தீண்டாமை ஒழியாது’ என்று சொல்லியிருக்கிறேன்.

வெகு பேர்களுக்கு அன்று ஆத்திரமாய் இருந்தது. இன்று எங்கள் நாட்டில் இப்படிப் பேசுவதும் கொளுத்துவதும் சர்வசாதாரணமாய் ஆகிவிட்டது. இராமாயணத்தைக் கொளுத்த ஒரு கூட்டமும், அதை ஆதரிக்க ஒரு கூட்டமும் தினமும் பொதுக் கூட்டம் கூட்டிப் பேசி வருகிறார்கள்.

மற்றும், பதினாயிரக்கணக்கான சுயமரியாதைக்காரர்கள் இந்து மதத்தைவிட்டு வெளியேறிவிட்டார்கள் என்றே சொல்லலாம். தங்கள் வடமொழிப் பெயர்களை எல்லாம் மாற்றிக் கொண்டார்கள்;

இந்துமத அறிகுறியாய் இருக்கிற சின்னங்களையெல்லாம் விட்டு விட்டார்கள்.

உச்சிக் குடுமிகளை எல்லாம் தாங்கள் கத்தரித்துக் கொண்டதுமல்லாமல் பிறருக்கும் கத்தரித்துவிட்டார்கள்.

அனேகர் புராணப் பண்டிகைகளையும் உற்சவங்களையும் கொண்டாடுவதில்லை.

இதற்கு முன்பு ஏழைகள் பணத்தை வஞ்சித்துக் கொள்ளையடித்த பணக்காரர்கள் இதற்கு முன்பு கோயில் கட்டிவந்ததை நிறுத்திவிட்டு, பள்ளிக்கூடம் முதலிய காரியங்களில் செலவிட்டு வருகிறார்கள்.

சென்சஸில் தாங்கள் இந்துக்கள் அல்ல வென்று அனேகம் பேர் சொல்லிவிட்டார்கள்.

புராண நாடகங்களையும், சினிமாக்களையும், பஜனைப் பாட்டுகளையும் ஜனங்கள் வெறுக்கத் தொடங்கி விட்டார்கள்.

கூடிய சீக்கிரத்தில் பெரும் கிளர்ச்சிகள் செய்து ஜெயிலுக்கும் ஆயிரக்கணக்கான வாலிபர்கள் போகத் தயாராய் இருக்கிறார்கள்.

எங்கள் நாட்டார் பலர் எங்கள் திராவிட நாடு, வடநாட்டு சம்பந்தத் திலிருந்து பிரிந்து தனியாக இருக்க விரும்பும் முக்கிய காரணங்கூட இந்து மதத்தால் ஏற்பட்ட இழிவும், ஆரிய ஆதிக்கத்திலிருக்கும் இழிவும் சுரண்டலும் ஒழியவேண்டும் என்பதற்குமாகும்.

தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாகிய டாக்டர் அம்மபேத்கர், ராவ்பகதூர் சிவராஜ் போன்றவர்கள் எல்லாம், தாங்கள் இந்து மதஸ்தர்கள் அல்லவென்றும், தாங்கள் இந்துக்கள் அல்லவென்றும், தங்கள் சமூகத்தார் இந்து மதத்திலிருந்து விலகவேண்டும் என்றும், 15 வருடத்திற்கு முன்பிருந்தே சொல்லி வருகிறார்கள்.

‘இந்து மதத்தை விட்டு விட்டால் எங்களை என்ன மதம் என்று சொல்லிக் கொள்வது?’ என்று கேட்கலாம்.

உங்களுக்குத் துணிவு இருந்து நீங்கள் வேறு எந்த மதத்தின் பேரை சொல்லிக் கொண்டால் சமுதாயத்தில் உங்களைத் தீண்டாமையும், இழிவும் அணுகாதோ அதைச் சொல்லுங்கள்.

அப்படிச் சொல்லிக் கொள்ளுவதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்குமானால் நீங்கள் திராவிடர்கள் என்றும், திராவிடர் சமயத்தவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

அதிலும் கஷ்டமிருந்தால், சமரச சமயத்தார், மனித சமுதாய ஜீவகாருண்ய சமயத்தார் என்று சொல்லிக் கொள்ளலாம்.

பொருள் இல்லாததும், பித்தலாட்டமானதும், இழிவையும் அன்னிய ஆதிக்கத்தையும், சுரண்டலையும் தருவதுமான ஒரு சுயநல கற்பனையான (இந்து) மதத்தின் பேரைச் சொல்லிக் கொள்வது என்பது வெட்கக் கேடான காரியமாகும்.

மதம் வேண்டுமானால் மதம் வேண்டும் என்பவர்கள் மதத் தத்துவங்களையும் அவசியத்தையும் ஆராய்ச்சி செய்து பார்த்து, ஒரு மதத்தைத் தழுவுவது என்பது அறிவுடைமையாகும்.

அப்படியில்லாமல், தான் ஒரு மதத்தில் பிறந்துவிட்டான் என்பதற்காகவே அதை எப்படி விடுவது என்று சொன்னால் அது வருணாசிரமத்தை மற்றொரு முறையில் பின் பற்றுவதேயாகும்.

பகுத்தறிவுவாதி என்று சொல்லுவது எல்லா மதத்திற்கும் தாய் மதம் என்று சொல்லிக் கொள்வதை ஒக்கும். நீங்கள் திராவிடர்கள் என்பதை உணராவிட்டாலும் நீங்கள் ஆரியர்கள் அல்லர்.

ஆரிய சம்பிரதாயத்திற்குக் கட்டுப் பட்டவர்கள் அல்லர் என்றும், ஆரியர்கள் இந்த நாட்டிற்குக் குடியேறிவந்த ஓர் அன்னிய இனத்தவர்கள் என்றும்

அவர்களுடைய ஆதிக்கத்திற்கு ஏற்பட்ட கடவுள், மத, சாத்திர, புராண, இதிகாசங்களைச் சுமந்துகொண்டிருப்பதன் பயனாகவே இந்த இழி நிலையில் இருக்கின்றீர்கள் என்றும் தெரிந்தால் எனக்கு அதுவே போதுமானதாகும்.


தோழர்களே!முன்னுரையாக அதிகநேரம் பேசிவிட்டேன். அனேக காரியங்கள் நடக்கவேண்டி இருப்பதால் மாநாட்டுக் காரிய நடவடிக்கை ஆனபிறகு சில வார்த்தைகள் சொல்லுகிறேன்.

நான் சொன்ன இவற்றை நீங்கள் நன்கு ஆலோசனை செய்து பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

SOURCE: (கான்பூரில், 29, 30, 31.12.1944-ல் நடந்த இந்திய பிற்படுத்தப்பட்ட இந்து வகுப்பார் சங்க மாநாட்டுத் தலைமை உரை - ‘குடி அரசு’ 13.1.1945)
---------------------------

சுட்டியை சொடுக்கி ப‌டிக்க‌வும்.

>>>> இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7.b.ஆபாசமே ஆயுதமா?.ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான்.இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான்.வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.


>>>>> இந்துமதம் இந்திய மதமா?
இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணர்களின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்

Thursday, July 21, 2011

நித்யானந்தாவின் குண்டலினி காமெடி. VIDEO

நித்யானந்தாவின் குண்டலினி காமெடி.

இப்பொழுது நித்யானந்தா என்னும் இளம் சாமியார் கிளம்பி பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.

இரண்டு நாள்களுக்கு முன்பு மலிவான விளம்பரம் பெறும் ஒரு ஏற்பாடு செய்தார்.

தன் பக்தர்கள், வெளிநாட்டுக்காரர்கள், பத்திரிகையாளர்களை அழைத்து ஒரு ஜால வித்தையைச் செய்வதாக அறிவித்தார்.

குண்டலி சக்தி மூலம் புவிஈர்ப்பு விசைக்கு எதிராக உங்களை எல்லாம் அந்தரங்கத்தில் மிதக்க வைக்கப் போகிறேன் என்றார். மிகுந்த ஆர்வத்துடன் பொது மக்களும் அந்தக் காட்சியைக் கண்டு களிக்கக் கூடியிருந்தனர்.

அபிமான நடிகை ரஞ்சிதா உட்பட பக்தர்களை குதித்துக் குதித்து எழச் சொன்னார் அவ்வாறே தவளைகள் மாதிரி தத்தித் தத்திக் குதித்தனர்.

குறிப்பிட்ட ஆக்ஞையை செய்து பக்தர்களை அந்தரங்கத்தில் மிதக்கச் செய்ய சைகையைக் காட்டினார். அந்தோ பரிதாபம், தன் அபிமான நடிகை உட்பட யாரும் அந்தரங்கத்தில் மிதக்கவில்லை; கீழே விழுந்ததுதான் மிச்சம்!

வெளிநாட்டுக்காரர்கள், பக்தர்கள், பொது மக்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம்! நித்யானந்தா மிகுந்த அவமானகரமான முறையில் மூக்கறுந்தது தான் மிச்சம்.

மக்களைக் கூட்டி இப்படி ஏமாற்றியதற்காகக்கூட அவர்மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கலாம் - எடுக்கவும் வேண்டும்.

ஏமாறாதீர்கள்!

நமது கனிவான வேண்டுகோள்.

சாமியார்கள் சித்து விளையாடி, அதிசயங்களை நிகழ்த்திக் காட்டி, தாங்கள் கடவுள் அருள் பெற்றவர்கள், கடவுளிடம் நேரிடையாகப் பேசக் கூடியவர்கள் என்ற மாயையை ஏற்படுத்தி, மக்களைச் சுரண்டுவதை ஒரு கலையாக நடத்தி வருகின்றனர்.

மிகப் பெரிய தந்திரவாதியான சாயிபாபா பல அதிசய செயல்களை செய்து காட்டி மக்கள் மத்தியில் ஒரு பிரேமையை ஏற்படுத்தி வந்தார். லிங்கம் கக்குவார், கை அசைப்பில் திருநீறு கொடுப்பார் - தங்கச் சங்கிலியை வரவழைத்துக் கொடுப்பார்.

பக்திப் போதையில் மூழ்கிய மக்கள் இந்தத் தந்திரக் காட்சிகளை கடவுள் சக்தியால் செய்து காட்டுவதாக நம்பி, அவரிடம் சரணடைந்தனர், பொருள்களைக் கொட்டிக் கொடுத்தனர். வீட்டுக்கு வீடு அவர் படத்தை மாட்டிப் பூஜை செய்யவும் ஆரம்பித்தனர்.

அவரை எதிர்த்துப் சவால் விட்டனர். பெங்களூர் நரசிம்மையா (துணைவேந்தர்) சாயிபாபாவை சந்திக்க விரும்பினார். குறிப்பிட்ட சிலரின் முன் அதிசயங்களைச் செய்து காட்ட முடியுமா என்று சவால் விட்டார்.

உரிய பதில் இல்லை; மாறாக நாய்கள் குரைப்பதற் கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் என்று கூறி, தனது தகுதியை வெளிப்படுத்தினார் சாயிபாபா.

பிரபல தந்திரக் கலை நிபுணர் பி.சி. சர்க்கார் சாயிபாபாவை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கடிதம் எழுதினார். பதில் இல்லை. உடனே அஸ்ஸாம் வியாபாரி என்று சொல்லிக் கொண்டு, புட்டபர்த்தி சென்று சாயிபாபாவைச் சந்தித்து, நேருக்கு நேர் சாயிபாபா செய்து காட்டிய அதே வித்தையைச் செய்துகாட்டி பாபாவைப் பதற வைத்தார்.

அதற்குப் பின்னால் படிப்படியாக இந்த மேஜிக்குகளைச் செய்வதைக் குறைத்துக் கொண்டார்.

பிரபல மனநல மருத்துவர் ஆப்ரகாம் டி. கோவூர் அவர்களும், கோவை பிரேமானந்தா அவர்களும் சாயிபாபாவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தனர்.


சாமியார்களின் சக்தி என்பது வெறும் பூஜ்ஜியம் தான் என்பதை இதன் பிறகாவது பொது மக்கள் உணர வேண்டும். பாமரத்தனமான பக்திப் போதையிலிருந்து விடுபட வேண்டும். ஏமாற்றுக்காரர்களான, சுரண்டல் பேர்வழிகளான சாமியார்களிடம் ஏமாறக் கூடாது என்பதே நமது கனிவான வேண்டுகோளாகும்.

=================
ஏமாறாதீர்கள்!

சித்தர்களும் யோகிகளும் நாடி தேடி வந்து உபதேசிக்கப்பட்ட‌ ??? சன்யாசி, யோகி, சித்தர், குரு ஆகிய யோகி ஸ்ரீ ராமானந்த குருஜி .

இவர் மந்திரம் ,அஞ்சனம் (மை போட்டு பார்த்தல்), ஜோதிடம் , வாஸ்து , ஆன்மீகம் , அதிர்ஷ்ட கற்கள், ஆவிகள் உலகம், (யோகி ஸ்ரீ ராமானந்த குருஜி தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் பெரும் அரசியல் மேதையும தென்னாட்டு காந்தியாகவும் வாழ்ந்த திரு. காமராஜர் ஆவியை வரவழைத்து பேசியது.???)  

ஆவிகளை வரவழைத்து பேசுவது, அமானுஷ்ய அனுபவங்கள் ,அதிசய மூலிகை , அந்தரங்கம் , நீர் மேல் நடக்க காற்றில் மிதக்க கண்ணுக்கு தெரியாமல் மறைய குண்டலினி யோகம், சித்த மருத்துவம், மதங்களின் வரலாறு , பன்னூல் ஆக்கம், தியானம், அரசியல் ஆகியவைகளில் சிறப்பு பெற்று ???

தன்னுடைய உஜிலாதேவி வலைப்பதிவு மூலம் உலகத்தோர் உய்வுற சமூக தொண்டாற்றுவதுடன் வெள்ளையர்களையும் சீடர்களாக கொண்டவர். ??

நாம் எதையெல்லாம் இழந்து வந்திருக்கிறோம் இழந்து கொண்டு இருக்கிறோம் என்பதை கொஞ்சமாவது யோசித்து பாருங்கள்

ஏமாற்றுக்காரர்களான, சுரண்டல் பேர்வழிகளான சாமியார்களிடம் ஏமாறக் கூடாது என்பதே நமது கனிவான வேண்டுகோளாகும்


Click and read   >>>>  இந்திய மூளை திருடப்பட்டு விட்டது. யாவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது.  <<<<<